விவசாய கடன்களுக்கும்.. இனி சிபில் ஸ்கோர் அவசியம்? வந்தது அசரடிக்கும் ரூல்ஸ்.. இனி எல்லாம் ஈஸி
சென்னை: விவசாயக் கடன் வழங்கும் முறை குறித்து தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் தொடர்ந்து வட்டியில்லா கடன்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் பழைய நடைமுறையே தொடரப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. முந்தைய நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.
சமீபத்தில் விவசாய கடன் வழங்குவதில் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த அரசு திட்டமிட்டிருந்தது. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் (CIBIL score) அடிப்படையில் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த புதிய திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

விவசாயக் கடன் வழங்குவதில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை மாற்றப்படாது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தொடர்ந்து வட்டியில்லா கடன்களைப் பெற முடியும். அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு பழைய முறையைத் தொடர அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், விவசாயிகள் கடன் பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது. எனவே, வட்டியில்லா கடன் திட்டம் தொடர்ந்து செயல்படும்.
சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்
சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டு உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இதற்கு கூட்டுறவுத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது. சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை, இதர வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் .. அதேபோல் ஏற்கனவே நிறைய கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக அளிக்கப்பட்டு உள்ள விளக்கத்தில், விவசாயிகளின் குறுகியகால வேளாண் கடன் தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக உழவர் கடன் அட்டை திட்டம் (Kisan Credit Card KCC) 1998ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் வேளாண் பணிகளுக்கு குறுகிய காலக் கடன்களைப் பெற விவசாமிகளுக்கு உதவுவதோடு வேளாண்மை சார்ந்த கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட இதர காரியங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன
தமிழ்நாட்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை திட்டத்தின் (KCC Crop Loan) கீழ் வட்டியில்லா பயிர்க்கடன், நகை அடமானத்தின் பேரில் பயிர்க்கடன் (KCC AH ) கால்நடைப் பராமரிப்பு பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்கான நடைமுறை மூலதனக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மீன் வளர்ப்பு பராமறிப்பு கடன்கள் தற்போது அதிகளவில் வழங்கப்பட்டு வருவதால் இக்கடன்கள் வழக்குதல் தொடர்பான மாதிரி வழிகாட்டு நெறிமுறைகள் வருக்கப்பட்டு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. இவ்வழிகாட்டு நெறிமுறைகளை கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு பராமரிப்பு கடன்கள் வழக்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் நடைமுறைப்படுத்தி தெரிவிக்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் கடன்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும். நடைமுறை மூலதனக்கடன் (Working Capital தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே இக்கடன் வழங்கப்பட வேண்டும். கடன் பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் தற்போது ரூ2 இலட்சம் வரை தனிநபர் ஜாமீன் அடிப்படையில் பிணைமின்றி கடன் வழங்குவது போல் இக்கடன்களும் வழங்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications