Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு முழுக்க பெண்களுக்கு ஜாக்பாட்.. அரசின் சூப்பர் சட்டம் அமல்.. லோன் வாங்குவது இனி ஈஸி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் நிறுவனங்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. நேற்று முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

கடன் வழங்கும் நிறுவனங்கள் 4 லட்ச ரூபாய் வரையிலான கடன்களுக்கு மக்களிடம் இருந்து எந்த பிணையும் பெறக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 லட்சம் வரையிலான கடன்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களிடம் இருந்தும் பிணை பெறக் கூடாது என்றும் அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

emi loan

கடன் வழங்கும் நிறுவனங்கள் நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட விதிகள் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய சட்டம் தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய சட்டத்தின்படி, 4 லட்சம் வரை கடன்களுக்கு பொதுமக்களிடம் இருந்தும், 10 லட்சம் வரை கடன்களுக்கு மகளிர் சுய குழுக்களிடம் இருந்து பிணையம் எதுவும் பெறக் கூடாது.

தமிழ்நாடு பணம் வழங்கும் நிறுவனங்கள் சட்டம் அமல்

அதேபோல் சிறு கடன்களை வழங்கும் நிறுவனங்கள் அச்சுறுத்தும் வகையில் வசூல் செய்வதைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு, 'தமிழ்நாடு பணம் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளைத் தடுத்தல்) சட்டம், 2025' என்பதை அறிவித்துள்ளது. இது, கடன் வசூல் நடைமுறைகளில் ஒழுக்கத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவரும் ஒரு முக்கியச் சட்டமாகும். இச்சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது.

சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் இதர கடன் வழங்கும் முகமைகளால் ஏற்படும் கட்டாய வசூலில் இருந்து விவசாயிகள், பெண்கள், சுய உதவிக் குழுக்கள் போன்ற நலிந்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாப்பதே இச்சட்டத்தின் பிரதான நோக்கம். டிஜிட்டல் கடன் தளங்கள் உட்பட தமிழகத்தில் செயல்படும் அனைத்து பணம் வழங்கும் நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். எனினும், இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் இதன் வரம்பிலிருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கடன் வாங்கியவர்களுக்கு எதிராகக் கட்டாய நடவடிக்கை எடுப்பது தொடர்பான சட்டப் பிரிவுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாய நடவடிக்கை

'சிறு கடன்' என்பது ஆண்டுக்கு ₹3 லட்சம் வரையிலான குடும்ப வருமானம் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் கடன் ஆகும். இதில், 'குடும்பம்' என்பது கணவன், மனைவி மற்றும் அவர்களின் திருமணமாகாத மகன் மற்றும் மகள் அடங்கிய தனிக்குடும்ப அலகு. 'கடன் வாங்கியவர்' என்பது தனிநபர் அல்லது நபர்களின் குழு அல்லது ஒரு சுய உதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுவாக இருக்கலாம் என சட்டம் வரையறுக்கிறது.

இச்சட்டத்தின் 20வது பிரிவு, 'கட்டாய வசூல்' என எவை கருதப்படும் என்பதைப் பட்டியலிட்டுள்ளது. கடன் வாங்கியவர் அல்லது அவரது குடும்பத்தினரை தடுத்தல், வன்முறையைப் பயன்படுத்துதல், அவமதித்தல், அச்சுறுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். தனியார் அல்லது வெளி முகமைகளைப் பயன்படுத்தி, அநியாயமான செல்வாக்கைப் பிரயோகித்து பணத்தைச் செலுத்த வற்புறுத்துதல், அல்லது அரசுத் திட்ட நலன்களுக்கான ஆவணங்கள், அத்தியாவசியப் பொருட்கள் அல்லது வீட்டு உடைமைகளை பலவந்தமாகப் பறிமுதல் செய்ய முயல்வதும் கட்டாய வசூலாகக் கருதப்படும்.

இந்தச் சட்டம், கட்டாய வசூல் பிரிவை மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதங்களை விதிப்பதற்கான வழிவகைகளை கொண்டுள்ளது. அரசு ஒரு பதிவு அதிகாரியை (Registering Authority) நியமிக்கும். இந்த அதிகாரி, தாமாகவே புகார்களை விசாரிக்கலாம் அல்லது அவற்றை தொடர்புடைய அதிகார வரம்பிற்குட்பட்ட காவல்துறைக்கு அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+