TN Assembly: காவிரி விவகாரத்தில் அனல் பறந்த விவாதம்.. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கொடுத்த விளக்கம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சட்டசபையில் விளக்கம் அளித்தார். காவிரி உரிமையில் தமிழக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார். தொடர்ந்து அவையில் காரசார விவாதம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுகையில், கர்நாடகா உடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சரால் கேட்டுக்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு வரவேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் கூறிவிட்டார். காவிரி உரிமையில் தமிழக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்றார்.
அமைச்சர் என்.ஆனந்த் பேசுகையில், மாதந்தோறும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கான உரிய நீரை பெறுவதில் சாவாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக இரு மாநில முதலமைச்சர்கள் இடையே கடந்த 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கர்நாடக முதலமைச்சர் அதை மறுத்துவிட்டார். தகுந்த நேரம் வரும்போது நேரில் சந்தித்து பேசுவோம் என தெரிவித்து விட்டார்.
மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. குடிநீர் தேவைக்கு மட்டும் அணை திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததன் காரணமாக காவிரியில் தண்ணீர் வரவில்லை. சூழலுக்கு தகுந்தபடி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும்.
தவெக அரசு காவிரி விவாகத்தில் சமரசத்தில் ஈடுபடாது. சட்ட, நிர்வாக, தொழில்நுட்பரீதியாகநடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் நலன், மற்றும் காவிரி உரிமையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
