விஜயிடம் காங்கிரஸ் பேசவே இல்லையாமே.. 70 சீட் எல்லாம் வதந்தி! கிளப்பிவிட்ட வியூக வகுப்பாளர்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 24 மணி நேரமாக விஜய் - காங்கிரஸ் கட்சி உடன் ஆலோசனை செய்ததாக பல செய்திகள் வந்தன. தவெக கட்சி காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களை கொடுக்க முன் வந்ததாக செய்திகள் வந்தன. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவும் தவெக விஜய் முன்வந்ததாக செய்திகள் வந்தன.

ஆனால் 70 சீட்-துணை முதல்வர் பதவி என்பது தவெகவின் சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பி விட்ட செய்தி என்று கூறப்படுகிறது. தவெக மாநாடு நிறைய எதிர்வினை விமர்சனங்களை சந்தித்ததால், விஜயின் "அங்கிள்" பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால், இந்த செய்தியை தவெகவின் சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பி விட்டார் என்று கூறப்படுகிறது.

congress

காங்கிரஸ் - தவெக விஜய் மீட்டிங்

தவெக சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பிவிட்ட இந்த செய்தியை காங்கிரஸ் - திமுக வட்டாரங்கள் மறுக்கிறார்கள். முக்கியமாக சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்க தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் விஜயை சந்திக்க ராகுல் காந்தி தரப்பு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விஜயின் இந்த முயற்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவது குறித்து ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்கள் கட்சி மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

அவ்வாறு நேரம் ஒதுக்கினால் அது தவறான சமிக்ஞையை அளிக்கும் என்பதால் ராகுல் காந்தி விஜயைச் சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிய கட்சிகள்கூட விஜயுடன் கூட்டணி வைக்கத் தயங்கும் நிலையில், காங்கிரஸ் போன்ற ஒரு பெரிய கட்சி விஜயைச் சந்திப்பது சரியானதல்ல என்று ராகுல் காந்தி - சோனியா காந்தி விவாதித்ததாக கூறப்படுகிறது.

தேர்தலுக்குத் தயாராகும் வகையில் விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியுடனான இந்தச் சந்திப்பு தேர்தல் வியூகங்கள் குறித்த விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் கூட்டணி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

மேலும், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைப் பிரிக்கும் நோக்கிலும் இந்தச் சந்திப்பு இருந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். ராகுல் காந்தியைச் சந்திப்பதற்கான அனுமதியைப் பெற, விஜய் தரப்பு கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு தூது அனுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்தச் சந்திப்பு நடந்தால் தி.மு.க.வை அது கடுமையாக அதிருப்தியடையச் செய்யும் என்பதால், ராகுல் காந்தி இதற்கு ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறிய கட்சிகள்கூட விஜயுடன் கூட்டணி வைக்கத் தயங்கும் சூழலில், பெரிய கட்சியான காங்கிரஸ், இவரைச் சந்திப்பது சரியாக இருக்குமா என ராகுல், சோனியா காந்தி விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

விஜய் பற்றி ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கூட்டணி மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். "கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் வளர வேண்டுமென்றால், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வரவேண்டும்."

"தமிழக வெற்றிக் கழகம் அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால், ஆட்சியில் காங்கிரஸுக்குப் பங்கு கிடைக்கும். 50, 60 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால், தமிழக வெற்றிக் கழகம் அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பது அவசியம். அப்போதுதான் நமக்கு பதவி கிடைக்கும். அமைச்சர் பதவிகள் கிடைத்தால்தான் கட்சி வளரும்" என்று அவர்கள் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

ஆனாலும், காங்கிரஸ் தரப்பு நிர்வாகிகள் சிலர், "கூட்டணி பற்றி இப்போது பேசுவது தேவையற்றது. தி.மு.க-வுடன் கட்சி மேலிடத்துக்கு நல்ல நெருக்கம் இருக்கிறது. கூட்டணி பற்றி அவர்களே முடிவெடுத்துக்கொள்வார்கள்" எனக் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+