சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத இடம் எது தெரியுமா.. எத்தனை மகிழ்ச்சியான விஷயம் பாருங்க!
சென்னை: சென்னையில் 1100-க்கும் மேற்பட்ட தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாறியுள்ள நிலையில் நகரின் தென் புறநகர் பகுதிகளில் ஒரு சாலையோ தெருவோ நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாறவில்லை என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் கொத்து கொத்தான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற நேரங்களில் அந்த குறிப்பிட்ட பகுதிகளுக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
அது போல் அந்த பகுதியிலிருந்து வெளியே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது போல் நோய் பரவல் அதிகமாக இருக்கும் இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாகவும் குறைந்த பரவல் இருக்கும் இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதி அல்லாதவையாகவும் இருந்து வருகின்றன.

மகிழ்ச்சி
சென்னை மாநகராட்சியில் அது போல் 1100 க்கும் மேற்பட்ட சாலைகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாறிவிட்டன. ஆனால் சென்னை புறநகரின் தென் பகுதியில் ஒரு நோய் கட்டுப்பாட்டு பகுதி கூட இல்லாதது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம்
பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சிகளில் 34 வீடுகள் இருக்கும் தெருவில் 3 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வந்ததை அடுத்து நேற்று முதல் அப்பகுதிக்குள் நுழைவதும் வெளியே வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் 2.4 லட்சம் மக்கள் தொகை கொண்ட பல்லாவரம் நகராட்சி பகுதியில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

30 நுண் நோய் கட்டுப்பாட்டு மையங்கள்
11 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அது போல் சென்னை புறநகர் மேற்கு பகுதியான ஆவடி மாநகராட்சி பகுதியில் 23 தெருக்களில் 5 முதல் 10 கேஸ்கள் உள்ளதால் அவை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டன. ஆவடியில் 30 நுண் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன.

ஆவடி
சுமார் 4.7 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆவடி பகுதியில் 489 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நோய் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத தென் பகுதிகள் என்றால் செம்பரம்பாக்கம், சிங்கப்பெருமாள்கோயில், மறைமலைநகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்டவை ஆகும்.
-
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications