குட் நியூஸ்.. இன்று 15 மாவட்டங்களில் எந்த கொரோனா மரணமும் இல்லை.. திடீர் மாற்றம்.. எப்படி சாத்தியானது
சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கொரோனா காரணமாக யாருமே பலியாகவில்லை.
தமிழ்நாட்டில் இன்று 3867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 72 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாடு கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 33005 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 4382 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 35294 ஆக உள்ளது.

எத்தனை
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக அளவில் கொரோனா மரணங்கள் பதிவாகிக்கொண்டு இருந்தன. தினசரி மரணங்கள் 400க்கும் அதிகமாக பதிவாகிக் கொண்டு இருந்தது. அதிலும் கடந்த மே மாதத்தில் அதிக அளவில் மரணங்கள் பதிவானது. இதனால் தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடுமோ என்ற அச்சம் நிலவியது.

கேஸ்கள்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் வேகமாக சரிந்தது. வேகமாக புதிய கேஸ்கள் குறைந்தது. ஆனால் பலி எண்ணிக்கை மட்டும் குறையாமல் 300- 400 வரை பதிவாகி வந்தது. புதிய கேஸ்கள் குறைந்தாலும், ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதி ஆகி இருந்தவர்கள் மரணம் அடைந்த காரணத்தால் பலி எண்ணிக்கை குறையாமல் இருந்தது.

பலி எண்ணிக்கை
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 200, 150 என்ற எண்ணிக்கையில் மரணங்கள் பதிவான நிலையில் இன்று 72 பேர் மட்டுமே தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அதிலும் 15 மாவட்டங்களில் இன்று கொரோனா காரணமாக யாருமே பலியாகவில்லை.

எங்கு
அரியலூர், செங்கல்பட்டு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா காரணமாக ஒருவர் கூட பலியாகவில்லை. கடந்த வார கேஸ்கள் குறைந்தது இதற்கு ஒரு காரணம் ஆகும். இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன
தொடர்ந்து புதிய கேஸ்களை விட டிஸ்சார்ஜ் அதிகம் ஆகியுள்ளது. இதனால் ஆக்டிவ் கேஸ்கள் 36 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இதன் காரணமாக நோயாளிகளை தீவிரமாக கவனித்து அவர்களை குணமடைய வைக்க முடிகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை குறைந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டிஸ்சார்ஜ்
அதோடு பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக தினசரி கேஸ்கள் 50-100 என்ற அளவிலேயே பதிவானது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து, இருப்பவர்களை தீவிரமாக கண்காணித்து குணப்படுத்த முடிகிறது. இதனால்தான் இன்று 15 மாவட்டங்களில் எந்த மரணமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications