கேப்பே விடாத திமுக! அதிமுக சுதாரித்து எழும் முன்! அடுத்த அட்டாக் பாருங்க! பக்காவா காய் நகர்த்துறாங்க
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் அதிமுக வீழ்ந்துள்ள நிலையில் திமுக அடுத்த டார்கெட்டை நோக்கி நகர தொடங்கி உள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
திமுக பிளான்: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் அதிமுக வீழ்ந்துள்ள நிலையில் திமுக அடுத்த டார்கெட்டை நோக்கி நகர தொடங்கி உள்ளது. இந்த தோல்வியில் இருந்து அதிமுக சுதாரிக்கும் முன் திமுக அடுத்தகட்ட பிளான்களை, narrative களை செட் செய்ய தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு 200+ தொகுதிகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு மிஷன் 200+ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
மிஷன் 200+ என்பதை ஸ்டாலின் கொண்டு வருவதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருக்கிறதாம். ஸ்டாலின் மேசையில் வைக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்தான்.. அவருக்கு இந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.
சட்டசபை தேர்தல்; தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் இருக்கும் சட்டசபை தொகுதியில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்கள் கிடைத்தன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
2024 லோக்சபா தேர்தல் சமீபத்தில் முடிவுகள் வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வென்றது இல்லை.
சட்டசபை தொகுதி ரீதியான தேர்தல் விவரம்: இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 221 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது.
8 இடங்களில் அதிமுக முதலிடம் பிடித்துள்ளது. 3 தொகுதிகளில் பாமக முதலிடம் பிடித்துள்ளது. 2 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட, பாஜக/தாமரை போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் முதலிடம் வரவில்லை. அதிமுக 8 தொகுதிகளில் அதாவது எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
பாமக 3 தொகுதிகளில் பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது. தேமுதிக 2 தொகுதிகளில் திருமங்கலம், அருப்புக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகளிலும் பாஜக ஒரு தொகுதியில் கூட முதலிடம் இல்லை. அதிமுக 8 தேமுதிக 2 பாமக 3 தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்டாலினுக்கு ரிப்போர்ட்: இதை பற்றித்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அதன்படி தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால் திமுக கிளீன் ஸ்வீப் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக படுதோல்வி அடையும் என்றும் ரிப்போர்ட் தெரிவிக்கின்றன. இதை மனதில் வைத்தே ஸ்டாலின் 200+ மிஷன் என்பதை அறிமுகப்படுத்தி உள்ளாராம்.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மோசமாக செயல்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக 1 இடத்தை கூட வெல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவே அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை சென்றார். ஆனால் அந்த யாத்திரையும் பலன் அளிக்கவில்லை.
பாஜக முன்னாள் தலைவர் எல் முருகனின் வேல் யாத்திரைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் 4 எம்எல்ஏ இடங்களை வென்றது. அதேபோல் தமிழிசை தலைவராக இருந்த போது 2 இடங்களை பாஜக வென்றது.
ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலைக்கு கீழ்.. அவர் எண் மண் எண் மக்கள் யாத்திரை சென்றும் கூட ஒரு எம்பி சீட் கூட கிடைக்கவில்லை. அவரின் அரசியல் டிராக் ரெக்கார்ட் இதுவரை பூஜ்ஜியமாகவே உள்ளது. இந்த எண் மண் எண் மக்கள் யாத்திரை வாக்கு சதவிகிதம் ரீதியாகவும், இடங்கள் ரீதியாகவும் சரி அவருக்கும் கட்சிக்கும் பலன் கொடுக்கவே இல்லை, என்று ரிப்போர்டுகள் கூறுகின்றன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications