மோடி வருகை.. இந்த முறை வெறும் கோ பேக் மோடி கிடையாது.. அதுக்கும் மேல்.. நெட்டிசன்ஸ் அலும்பல்!
பிரதமர் மோடி தமிழகம் வருவதை அடுத்து அவருக்கு எதிராக டிவிட்டரில் மீண்டும் தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வருவதை அடுத்து அவருக்கு எதிராக டிவிட்டரில் மீண்டும் தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த முறை கோ பேக் மோடிக்கு ( #GoBackModi) பதில் வேறு ஒரு டேக் வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற உள்ள பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளார். சென்னையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கும். பிரதமர் மோடி 4 மணிக்கு இதில் கலந்து கொள்வார். இதில் பாஜகவுடன் தமிழக கூட்டணி கட்சிகளும் மேடை ஏற இருக்கிறது.

மோடி தமிழகம்
பொதுவாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போது கோ பேக் மோடி #GoBackModi என்ற டேக் டிரெண்டாவது வழக்கம். தமிழர்கள் இதை ஒரு வழக்கமாக, குட் மார்னிங் சொல்வது போல மோடி வரும் போது சொல்வார்கள். டிவிட்டரில் #GoBackModi டிரெண்டானால், கண்டிப்பாக மோடி தமிழகத்தில் இருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம்.

நான்கு முறை
இதற்கு முன் நான்கு முறை இந்த டேக் வைரலானது. பிரதமர் மோடி சென்னை வந்த போது - உலக அளவில் நீண்ட நேரம் டிரெண்ட், நம்பர் 1 இடம் பிடித்தது. பிரதமர் மோடி மதுரை வந்த போது - உலக அளவில் டிரெண்ட், நம்பர் 3 இடம் பிடித்தது. பிரதமர் மோடி திருப்பூர் வந்த போது - உலக அளவில் டிரெண்ட், மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்தது. பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்த போது - தேசிய அளவில் டிரெண்ட், மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்தது

வைரலாகிறது
ஆனால் இந்த முறை #GoBackModi க்கு பதில் #GoBackSadistModi வைரலாகிக் கொண்டு இருக்கிறது. தேசிய அளவில் இந்த டேக் தற்போது முதலிடம் பிடித்து இருக்கிறது. #GoBackModi டேக்கை விட #GoBackSadistModi டேக்கில் அதிக டிவிட்டுகள் போடப்பட்டதால் இது இந்தியாவில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

என்ன காரணம்
#GoBackModi க்கு எப்படி திமுகவின் கருப்பு கொடி போராட்டம் ஒரு விதையோ அதே போல்தான் #GoBackSadistModi க்கு திமுக தலைவர் ஸ்டாலின்தான் விதை போட்டது. பிரதமர் மோடியை முதன்முதலில் திமுக கூட்டத்தில் ஸ்டாலின்தான் சாடிஸ்ட் என்று கூறினார். தற்போது அதே வார்த்தை வைரலாகி வருகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications