Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 கிராம் தங்கத்தை விடுங்க, வேளச்சேரி மசாஜ் சென்டரில் ஹேப்பி எண்ட் சொல்லலயாமே.. சென்னையில் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு பிரபல மசாஜ் சென்டரில் கடந்த 7ம் தேதி இரவு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது... அதுகுறித்து தற்போதுதான் வெளிஉலகுக்கும் தெரியவந்துள்ளது.. உடனே இது தொடர்பான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது சென்னையில்?

சென்னை வேளச்சேரியில் சட்டபூர்வமான அனுமதியுடன் இயங்கி வருகிறது ஒரு மசாஜ் சென்டர்.. கடந்த 7ம் தேதி சுமார் 7.30 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்தது.

Chennai Velachery Spa

வேளச்சேரி மசாஜ் சென்டர்

அந்த ஐந்து பேரில் 4 பேர் மசாஜ் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து அதற்கான சேவையை பெற்றனர். ஆனால் அவர்களுடன் வந்த மற்றொரு நபர் மிகக்கடுமையான மது போதையில் இருந்துள்ளார்.. அதனால் அவருக்கு மசாஜ் செய்ய அங்கிருந்த இளம் பெண் ஊழியர்கள் மறுப்பு சொல்லி உள்ளனர்..

எனினும் அந்த நபர் கூடுதல் பணம் தருவதாக ஆசை காட்டியதால் பெண் ஊழியர்கள் அவருக்கு மசாஜ் செய்ய ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டனர்... மசாஜ் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு அந்தப் பெண் ஊழியர் போதை ஆசாமியிடம் வழக்கமான முறையில் பேசிவிட்டு அங்கிருந்து வெளியே அனுப்பியதாக தெரிகிறது.

ஹேப்பி எண்ட்

ஆனாலும், அந்தப் பெண் ஊழியர் தன்னிடம் "ஹேப்பி எண்ட்" என்று சொல்லவில்லை என்று, அந்தப் போதை ஆசாமி வெளியே காத்திருந்த தனது 4 நண்பர்களிடம் முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 5 பேர் கொண்ட கும்பல் மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு சாதாரண வார்த்தையை சொல்லவில்லை என்பதற்காகத் தொடங்கிய இந்தத் தகராறு திடீரென வன்முறையாக மாறியது. அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்து மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்த தனலட்சுமி, ஷாலினி மற்றும் பிரியங்கா ஆகிய மூன்று பெண் ஊழியர்களையும் கத்திமுனையில் மிரட்டினர்.

உயிருக்கு நடுநடுங்கிப் போய் நின்றஅந்தப் பெண்களிடமிருந்து 10 கிராம் தங்க நகைகள் மற்றும் அவர்களின் காஸ்ட்லி செல்போன்களை அந்த ரவுடிக் கும்பல் வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டது.

மானிட்டர், கேமரா

தங்கள் மீதான அடையாளங்கள் எங்கும் பதிவாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த மசாஜ் சென்டரில் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் டிவிஆர் மற்றும் மானிட்டர் ஆகியவற்றை அந்த கும்பல் அங்கிருந்து கழற்றி எடுத்து சென்றுவிட்டது..

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் உடனடியாக வேளச்சேரி காவல் நிலையத்தில் விரிவான புகார் ஒன்றை அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மசாஜ் சென்டருக்கு அருகே உள்ள மற்ற சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

மொத்த பேரும் ரவுடிகள்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி வீரமருது என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே 5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் உறுதியானது..

மேலும் வீரமருதுவுடன் இணைந்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்கிற பில்லி பவுல் மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ரவிக்குமார் என்கிற ராக்கப்பன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது..

Chennai Velachery Spa

5 கிராம் தங்க நகைகள்

இதில் ராக்கப்பன் என்பவர் மீது ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம். குற்றவாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வீரமருது, ஆனந்த்குமார் மற்றும் ரவிக்குமார் ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கிராம் தங்க நகைகள், 5 செல்போன்கள், 2 கத்திகள் மற்றும் ஒரு பைக், போன்றவற்றை றிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு நபர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிப்பதற்காக போலீசார் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்... ஹேப்பி எண்ட் என்ற ஒரு வார்த்தை சொல்லாததால், அந்த மசாஜ் சென்டரே ரணகளமாகிவிட்டது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+