Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திருட்டு ரயிலேறி".. அதைவிடுங்க.. நடிகை கஸ்தூரி "அந்த" கட்சிக்கு போறாங்களாமே.. பின்னாடியே வந்த வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்துவிட்டதாக, சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இது நிஜமா? என்னவா இருக்கும்?

சில வருடங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, சமூக செயற்பாட்டாளரும், பிரபல நடிகையுமான கஸ்தூரி அவரை நேரில் சந்தித்துவிட்டு வந்தார்.

அப்போது பூங்கொத்து தந்து எடப்பாடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.. இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் அப்போது வைரலாயின.

இதை பார்த்ததுமே கஸ்தூரி, அதிமுகவில் இணைந்துவிட்டார் என்கிற செய்திகள் பரபரப்பாக பரவின.. அதற்கேற்றவாறு, திமுகவை சரமாரியாக விமர்சித்து வரவும், நிச்சயம் அதிமுகவில் அவர் இணைந்திருக்கக்கூடும் என்றும், தேர்தல்களில் கட்சி சார்பாக நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரத்துக்கு கஸ்தூரியை அதிமுக மேலிடம் பயன்படுத்திக்க கூடும் என்றும் தகவல்கள் வலம்வந்தன.. ஆனால், இந்த தகவல்களை எல்லாம் அப்போதே கஸ்தூரி மறுத்தார்.. "நல்ல குடிமகனாக அரசு செய்யும் நல்ல பணிகளுக்கு என் ஆதரவு உண்டு. அரசுக்கு மட்டும், அதிமுகவிற்கு இல்லை" என்று விளக்கமும் தந்திருந்தார்.

No, I did not join AIADMK, the Famous actress Kasturis explanation and what happened

ஹேப்பி பூரிப்பு : இதற்கு பிறகு, அடுத்த சில மாதங்களில் நம் "ஒன் இந்தியா' தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை கஸ்தூரி தந்திருந்தார்.. அது லாக்டவுன் சமயம்.. தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் தொற்று பரவியிருந்த நேரமும்கூட.. அந்த நேரத்தில் கஸ்தூரி நம்மிடம் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை வியந்து கூறியிருந்தார்.. "லாக்டவுன் சமயத்தில், வெளிமாநில தொழிலாளர்களின் நலனில் தமிழக அரசு எடுத்து வரும் அக்கறையும், முயற்சியும் பாராட்டுக்குரியது, வேறு எந்த மாநிலத்தையும்விட நம் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டுக்குரியது" என்று தெரிவித்திருந்தார்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமிக்கு அப்போது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லி கஸ்தூரி ட்வீட் பதிவிட்டிருந்தார்.

EPS: அந்த பதிவில், "எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கேட்டதும் எனக்கு தோன்றுவது- எளிமை. மிக மரியாதையாக, தோழமையுடன் பேசுவார். பொது வாழ்க்கையும் பதவியும் அவரின் அந்த அடிப்படை பண்பை மாற்றவில்லை. EPS அவர்கள் தமிழகத்தின் முதல்வராக தலைமையேற்ற பொழுது, இரண்டு வாரம் கூட தாக்கு பிடிக்கமாட்டார் என்று பலர் பந்தயம் கட்ட தயாராக இருந்தார்கள்.. ஆனால், அத்தனை சிக்கல்களை சமாளித்து, பல சோதனைகளை கடந்து, இரண்டு வருட ஆட்சியில் எதிர்க்கட்சியினர் கூட 'அட, பரவாயில்லையே!' என்று வியக்குமளவுக்கு நல்ல பெயரை வாங்குவது சுலபமல்ல" என்று கூறியிருந்தார்.

தண்ணியிலே.. அதுமட்டுமல்ல, லாக்டவுன் சமயத்தில் டாஸ்மாக்கை எடப்பாடி பழனிசாமி திறந்துவிட்ட செய்தி பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அப்போது கஸ்தூரி, "இந்த கொரோனா காலம் எடப்பாடியாரின் தலைமைக்கு ஒரு அக்னி பரீட்சை. இரண்டு மாதமாக எடுத்த நல்ல பெயரையெல்லாம் இப்பொழுது தக்க வைத்து கொள்வாரா, இல்லை "தண்ணியில்" கரைத்துவிடுவாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.. டாஸ்மாக் கடைகளை திறக்க விரும்பாத கஸ்தூரி "தண்ணி" என்ற வார்த்தையை குறிப்பிட்டு தனது அதிருப்தியுடன் கலந்து இந்த பதிவினை பதிவிட்டிருந்தது, பலரது கவனத்தையும் அப்போது திரும்பி பார்க்க வைத்தது.

No, I did not join AIADMK, the Famous actress Kasturis explanation and what happened

பந்தயம்: இப்படி அதிமுக அரசு குறித்து, பாராட்டு அல்லது வருத்தம் அல்லது கருத்துக்களை தொடர்ந்து கஸ்தூரி பதிவிட்டு வந்தாலும், இதுவரை அதிமுகவில் இணையவில்லை.. திமுகவை கடுமையாக தற்போதுவரை விமர்சித்து வந்தபோதிலும்கூட, அதிமுகவில் அவர் இணையாமல்தான் இருக்கிறார்.. மற்றொருபுறம், பாஜகவின் தீவிரமான ஆதரவாளராகவும் கருதப்பட்டு வருகிறார்.. ஆனால், கடந்த 2 நாட்களாகவே திடீரென அதிமுகவில் கஸ்தூரி இணைய போவதாக செய்திகள் பரபரத்து வருகின்றன.. எடப்பாடிக்கு அன்று பூங்கொத்து போட்டோவை பதிவிட்டு, யாரோ இதை கிளப்பி விட்டுள்ளதாகவே தெரிகிறது.,. காரணம், இதெல்லாம் வதந்தி என்று கஸ்தூரியே விளக்கம் ஒன்றை தந்துள்ளார்... அத்துடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பொய் பொய்: அதில், "நான் கடந்த சில தினங்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் உள்ளேன். சமூக வலைதளங்களில் ஒரு பொய் செய்தியானது பரவி வருகிறது. அதாவது நான் அதிமுகவில் இணைந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் போட்டோ பரவி வருகிறது. நான்கு வருடங்களுக்கு முன்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் முதலமைச்சராக இருக்கும் போது சந்தித்தேன் அப்போது அவர் எனக்குப் பூங்கொத்து கொடுத்தார் அது இப்போது நான் பூங்கொத்துக் கொடுத்து அதிமுகவில் சேர்ந்தது மாதிரி வைரலாகி வருகிறது. பொதுவாகவே என்னைக் குறித்து வதந்திகள் வந்தால் அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன் ஏனென்றால் அது பழகிப் போய்விட்டது.

என்னை யாருடனாவது இணைத்துப் பேசுவார்கள், தற்போது நான் ஒரு கட்சியில் இணைந்தாக வதந்தி பரப்பியுள்ளார்கள் அந்த வதந்தியை எல்லாம் ஒப்பிடும் போது இது சிறந்த வதந்திதான். இந்த செய்தியில் உண்மையில்லை. எந்த கட்சியில் எப்போது சேருவேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.. அதிமுகவில் தான் சேரவில்லை என்று கஸ்தூரி சொன்னதையடுத்து, இந்த வதந்தி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.. ஆனால், எந்த கட்சியில் எப்போது சேருவேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கஸ்தூரி ஒரு சஸ்பென்ஸ் வைக்கவும், அது எந்த கட்சியாக இருக்கக்கூடும் என்று அடுத்த பஞ்சாயத்து, சோஷியல் மீடியாவில் ஆரம்பமாகி உள்ளது. இதற்கு, கஸ்தூரிதான் மறுபடியும் வந்து பதில் சொல்ல வேண்டும்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+