பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை! இந்தியா கூட்டணிக்கும் இல்லை! இனி நடக்க போகும் 8 முக்கிய விஷயங்கள்
சென்னை: 2026 லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்தியா கூட்டணிக்கும் மெஜாரிட்டி இல்லை. இந்த நிலையில் இந்திய அரசியலில் நடக்க போகும் 8 முக்கிய விஷயங்கள் எவை எவை என்று பார்க்கலாம்.
2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 290 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
என்ன நடக்கிறது: இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம்.
உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான்.
ஆனாலும் மோடியுடன் அத்தனை நெருக்கம் இல்லை. பாஜகவை ஆதரித்தாலும் மோடியை தனிப்பட்ட வகையில் கடுமையாக எதிர்க்க கூடியவர்கள். சந்திரபாபுநாயுடு எல்லாம் ஒரு காலத்தில் கடுமையாக மோடியை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 விஷயங்கள் : 2026 லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்தியா கூட்டணிக்கும் மெஜாரிட்டி இல்லை. இந்த நிலையில் இந்திய அரசியலில் நடக்க போகும் 8 முக்கிய விஷயங்கள் எவை எவை என்று பார்க்கலாம்.
1. பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் அவர்களை ஆட்சி அமைத்து மெஜாரிட்டி நிரூபிக்க சொல்லலாம். என்டிஏ ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்.
2. என்டிஏ கூட்டணி அடையாளம். என் டி ஏ கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் இந்தியா கூட்டணிக்கு போகலாம்.
3. இந்த கட்சிகள் இந்திய கூட்டணிக்கு போனாலும் பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் அவர்களை ஆட்சி அமைத்து மெஜாரிட்டி நிரூபிக்க சொல்லலாம். இந்த கட்சிகளிடம் பாஜக குதிரை பேரம் நடத்தலாம்.
4. . என் டி ஏ கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் இந்தியா கூட்டணிக்கு போய் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.
5. தெலுங்கு தேசம் அல்லது ஜேடியூ வெற்றியாளர்களை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளன. சந்திரபாபு நாயுடு அல்லது நிதிஷ் குமார் பிரதமர் ஆகலாம்.
6. இதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை என்றால் இந்திய கூட்டணியில் இருந்து ஆட்களை தூக்க பாஜக பார்க்கும். முதலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி உடன் கூட்டணி வைக்க கூட என்டிஏ முயலும்.
7. மேற்கு வங்கம் செட்டாகவில்லை என்றால் திமுக தொடங்கி மற்ற பல கட்சிகளை கூட தங்கள் கூட்டணிக்கு பெரிய பெரிய அமைச்சரவை போஸ்டுகளை கொடுத்து பாஜக அழைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது என்டிஏ கூட்டணி உடைந்தால்.
8. உதாரணமாக 2004 லோக்சபா தேர்தலில் தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. பாஜக 138 இடங்களை வென்றது. அப்போது பாஜக கூட்டணிக்கு தீவிரமாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை செய்தது. முக்கியமாக அப்போது சிபிஐ(எம்) 43 இடங்களை வென்றது. ஆனால் பாஜகவுடன் யாரும் அப்போது கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதேபோல் இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணிக்கு போக மாநில கட்சிகள் விரும்புமா என்பது சந்தேகமே. இதனால் இந்திய கூட்டணியின் ஆட்சி அமையும்.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications