ஒரு ரூபாய் கூட எனது வீட்டில் கைப்பற்றவில்லை.. வழக்கை சட்டப்படி சந்திக்க ரெடி.. விஜயபாஸ்கர் விளக்கம்
சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையினர் தனது வீட்டில் நடத்திய சோதனையில் எந்த ஒரு ஆவணங்களோ, பணமோ தங்கமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பொது வாழ்க்கையில் பயணிக்கும் நபர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவது வழக்கம் தான் என்றும் இதைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Recommended Video
இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, சென்னை, திருச்சி எனத் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
கோவையில் இருக்கும் அவரது மாமனார் வீட்டிலும் ரெய்டு தீவிரமாக நடந்து வருகிறது. அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சொத்து சேர்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறையினர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 23 லட்சம், 4.87 கிலோ தங்க நகைகள், 136 கன ரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கைச் சட்டப்படி சந்திப்பேன் எனத் தெரிவித்தார். மேலும், தனது இல்லத்தில் எந்த ஆவணங்களோ, பணமோ தங்கமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

எதுவும் கைப்பற்றப்படவில்லை
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் கடினமான ஒரு உழைப்பாளி. பொது வாழ்கையில் கூட இரவு, பகல் பார்க்காமல் நான் கடினமான உழைப்பை வெளிப்படுத்தி வருகிறேன். இது அனைவருக்கும் தெரியும். சட்டத்தை ஏற்று மதிக்கும் குடிமகன் என்பதால் இன்றைய தினம் நடத்தப்பட்ட சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளேன். எனது வீட்டில் இருந்து எந்தவிதமான ஆவணங்களோ, பணமோ தங்கமோ லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்றப்படவில்லை.

தவறான தகவல்கள்
இருப்பினும், ஊடகங்களில் இது தொடர்பாக சில தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. பொது வாழ்க்கையில் உள்ள எங்களுக்கு இது கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மதர் தெரசா அறக்கட்டளை ஏதோ இப்போது 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதை போலச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்த அறக்கட்டளை 24 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது என்பதே உண்மை. அதேபோல எனது சகோதரர் 2003இல் தொடங்கி, 18 ஆண்டுகளாகக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

சட்ட ரீதியாகச் சந்திக்கத் தயார்
அதிமுகவுக்கு இதுபோன்ற சோதனைகள் ஒன்றும் புதிதல்ல. இதை எல்லாம் துணிச்சலுடன் எதிர்கொள்ளும். லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை இன்னும் முடியவில்லை. இப்போதும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் இது குறித்துக் கூடுதலாக என்னால் எதுவும் கூற முடியாது. செவ்வாய்க்கிழமை இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, விரிவாக விளக்க உள்ளேன்" என்றார். மேலும் பொது வாழ்க்கையில் பயணிக்கும் நபர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவது வழக்கம் தான் என்றும் இதைச் சட்ட ரீதியாகச் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
ஜெயலலிதாவுக்கு முன்பே அதிமுகவில் இணைந்த நடிகை லதா! அமைச்சராக வேண்டியவர்! யார் இவர்? -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம்












Click it and Unblock the Notifications