2 பிஎச்கே, 3 பிஎச்கே இல்ல.. சென்னையில் மக்களிடையே கவனம் பெற்ற புது ஸ்டைல்.. ரியல் எஸ்டேட் மாறுதே
சென்னை: சென்னை மக்கள் இடையே 2 பிஎச்கே, 3 பிஎச்கே இல்லாமல் புதிய மாடல் வீடுகள் டிரெண்டாக தொடங்கி உள்ளன. மக்கள் இடையே அதிக அளவில் புதிய ஸ்டைல் வீடுகள் விற்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள இளம் தொழில் வல்லுநர்கள் ₹75 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான விலையில் 2.5 படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க தொடங்கி உள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் நியூக்ளியர் குடும்பத்துடன் இருப்பதால் 2 பிஎச்கே, 3 பிஎச்கே வீடுகள் இரண்டையும் விரும்பாமல் 2.5 பிஎச்கே வீடுகளை அதிக அளவில் வாங்குகின்றனர்.
பொதுவாக 2.5 பிஎச்கே வீடுகள் 1,000 சதுர அடிக்கு மேல் வருகிறது. இதனால் அளவும் பெரியதாக இருக்கும். இந்த 2.5 பிஎச்கே வீடுகளில் 60% வீடுகள் IT மையங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. பெரும்பாலும் இது போன்ற வீடுகள் OMR இல் அதிகம் உள்ளது. அதேபோல் போரூர், குன்றத்தூர் மற்றும் தாம்பரம் போன்ற பகுதிகளில் இதேபோன்ற வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட்: அதேபோல் தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட்டை முன்னேற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக, சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்களை கண்டறிவது என்பது மிகவும் அவசியமாகிறது.
ஆகவே, சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், விடுதிகள், பேருந்து நிலையங்கள், அலுவலக கட்டடங்கள் மற்றும் இதர முக்கிய உட்கட்டமைப்புகளான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், பாலங்கள் ஆகியவை குறித்து ஒரு ஒருங்கிணைந்த மதிப்பீடு மற்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி பின்வரும் இனங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதன்படி சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களைக் கண்டறிந்து தொடர்புடைய துறைகள் மற்றும் முகமைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து பொது மற்றும் அரசு கட்டடங்கள் மற்றும் இதர உட்கட்டமைப்புகளை முழுமையாகக் கணக்கெடுப்பு செய்ய வேண்டியும். அவற்றில் சேதமடைந்துள்ள அல்லது சிதிலமடையும் தருவாயில் உள்ளவற்றைக் உறுதி செய்து மேல் நடவடிக்கைக்காக அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
அத்துடன் கட்டமைப்பு உறுதியாக உள்ளதா அல்லது சேதம் மற்றும் சிதிலம் அடைந்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்து அதன் உறுதி தன்மை உறுதியாக இருப்பது கண்டறியப்பட்டால் பழுதுநீக்க நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
சிதிலமடைந்த கட்டமைப்புகள் மற்றும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள கட்டடங்கள் இருப்பது ஆய்வின்போது தெரிய வந்தால் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களில் உரிய பழுதுநீக்கப் பணிகள் அல்லது மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை சேதமடைந்த கட்டடங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதை தெளிவாக அறிவிக்க வேண்டும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications