இலையும் தண்ணீரும் ஒட்டாது.. எஸ்பி வேலுமணி பேசியது அவரது சொந்த கருத்து.. ஜெயக்குமார் ஒரே போடு
சென்னை: 2026-ல் தமிழகத்தை ஆளப்போகும் கட்சி அதிமுகதான் என்றும், பாஜவுடன் கூட்டணி என்பது இப்போதும் இல்லை எப்போதும் இல்லை. இலையும் தண்ணீரும் ஒட்டாது. எஸ்பி வேலுமணி கூறியது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்று சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறினார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. இதேபோல் அதிமுக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. மொத்தமாக திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்காது என்று அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசையும், அதிமுகவின் வேலுமணியும் இதை கருத்தை முன்வைத்து இருந்தனர். இதேபோல் இது தொடர்பாக அதிமுக பாஜக இடையே வார்த்தை யுத்தம் தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவின் வாக்கு வங்கி உயரவில்லை. கடந்த 2014 தேர்தலில் பெற்றதைவிட பாஜக குறைந்த வாக்கு சதவீதத்தை தான் பெற்றுள்ளது என்றும், எஸ்பி வேலுமணி கூறியது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்று கூறினார். ஜெயக்குமார் கூறியதாவது:-
தேர்தல் என்பது மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு. மக்கள் அளிக்கும் தீர்ப்புக்கு எல்லோரும் தலைவணங்க வேண்டும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிமுக 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட கட்சி. 2026-ல் தமிழகத்தை ஆளப்போகும் கட்சி அதிமுகதான். தேர்தலில் வெற்றி தோல்வி மாறி மாறி வரும். எஸ்பி வேலுமணி கூறியது அனுமானத்தில் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்று கூறினார். ஜெயக்குமார் கூறியதாவது:-
மாவட்ட செயலாலர்கள் கூட்டத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி இப்போதும் இல்லை. எப்போதும் இல்லை. எப்போதும் இல்லை என்றால் 2026 ஐயும் சேர்த்துதான் சொன்னோம். அதனால் அனுமானத்தில் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.
என்னை பொறுத்தவரை எஸ்பி வேலுமணி கூறியது அனுமானத்தில் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தாக இருக்கலாம். அனுமானத்தின் கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. நான் தெளிவாக சொல்கிறேன். இலையும் தண்ணீரும் எங்கேயாவது ஒட்டுமா? அந்த மாதிரிதான்.. இனிமே இலையும் தண்ணீரும் ஒட்டாது.. பாஜகவிற்கு கடிவாளம் போடப்பட்டு விட்டது.
இனிமேல் அவர்கள் இரண்டு பேரும் சொல்லும் பாதையில்தான் பாஜக செல்ல முடியும். தனியாக செயல்பட முடியாது. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். எதிர்காலத்தியும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. அண்ணாமலை இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி.. நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன தமிழ்நாட்டிற்கு பாஜகவால் எதுவும் நல்லது நடக்கப்போவது இல்லை.
இதை நீங்கள் கண்கூடாக பார்க்க போறீங்க.. சசிகலா அறிக்கை விடுவது பற்றி பேசுகிறீர்கள். இது குறித்து கேபி முனுசாமி பேசிவிட்டார். ஒற்றைத்தலைமையின் கீழ் கட்சி எழுச்சியோடு உள்ளது. எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். இனிமேல் கேபி முனுசாமி எந்த காலத்திலும் அந்த பேச்சுக்கே இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications