தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் இனி கிடையாது.. ஹைகோர்ட் தந்த ஹேப்பி நியூஸ்.. எங்கேனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க ரசிகர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த பார்க்கிங் கட்டண விவகாரத்தில், தற்போது தெலுங்கானா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.. குறிப்பாக சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ரசிகர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..!!

சமீபகாலமாக மல்டிபிளக்ஸ் மற்றும் ஷாப்பிங் மால்களில் உள்ள தியேட்டர்களை தாண்டி, சாதாரண ஒற்றைத் திரை தியேட்டர்களிலும் வாகன நிறுத்தக் கட்டணம் அநியாயமாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன..

தெலுங்கானா அரசு அரசாணை

இது தொடர்பாக தெலுங்கானா மாநில அரசு ஏற்கனவே ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது.. அந்த அரசாணையின்படி, வாகனங்களின் தகுதி மற்றும் நிறுத்தப்படும் நேரத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையைத் திரையரங்கு உரிமையாளர்கள் வசூலித்து வந்தனர்..

ஆனால், இந்த அரசு உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம், அந்த அரசாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.. இதன் மூலம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் இனிமேல் படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் தனியாக எந்தவித பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஓடிடி தளங்களின் அசுர வளர்ச்சியால் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வரும் நிலையில், இத்தகைய கட்டண உயர்வுகள் ரசிகர்களை மேலும் தியேட்டரை விட்டுத் தள்ளுவதாக அமைகிறது..

ஒரு தியேட்டருக்கு செல்லும்போது டிக்கெட் விலையை விட அங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் வாகன நிறுத்தக் கட்டணமே நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் பொருளாதாரச் சுமையாக மாறிவிட்டது..

பல தியேட்டர்களில் பைக்குகளுக்கு 20 முதல் 50 ரூபாய் வரையிலும், கார்களுக்கு 50 முதல் 100 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. இந்தச் சூழலில் நீதிமன்றத்தின் தலையீடு ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது..

நோ பார்க்கிங் - ஹைகோர்ட் அதிரடி

எனினும், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளின் பராமரிப்பு செலவு மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் போன்றவை இந்த பார்க்கிங் வருவாயை நம்பியே இருப்பதாக உரிமையாளர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்..

இந்த உத்தரவு தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மல்டிபிளக்ஸ் அல்லது மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு இது பொருந்தாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது..

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இருந்தாலும், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் இதே போன்ற பார்க்கிங் கட்டணப் பிரச்சனைகள் நீடித்து வருவதால், அங்கிருக்கும் ரசிகர்களும் இது போன்றதொரு தீர்ப்பைத் தங்கள் மாநிலங்களிலும் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்..

நம்முடைய தமிழ்நாட்டில் பல இடங்களில் முறையான கட்டண நிர்ணயமின்றி பார்க்கிங் வசூலிக்கப்படுவதால், பல ரசிகர்கள் வண்டிகளை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு செல்லும் அவலம் இன்னமும் நீடிக்கிறது.. எனினும் தற்போதைக்கு தெலுங்கானா ரசிகர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தியாகவே அமைந்துள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+