4 வழி மாநில சாலைகளில்.. இனி நோ டோல்கேட்.. தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு.. பொதுமக்கள் நிம்மதி
சென்னை: மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டாலும் அதில் டோல்கேட் அமைக்கப்படாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
7 மீட்டர் கொண்ட மாநில சாலையை, 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். மாநிலம் முழுக்க பல இடங்களில் இப்படி சாலைகளை மாற்றுகின்றனர். இப்படி மாற்றப்படும் சாலைகளில் டோல் கேட்டுகள் கூடாது, என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். டோல்கேட்கள் கூடாது என மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். மீறி வைக்கப்படும் டோல் கேட்டுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

முக்கியமாக மாநிலம் முழுக்க மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் டோல் கேட்டுகள் அமைக்கப்படவில்லை. இங்கே மீறி அமைக்கப்படும் டோல் கேட்டுகள் கண்டிப்பாக நீக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பேசுகையில்.. அதிகப்படியான டோல் கேட்டுகள் அமைக்க தமிழ்நாடு அரசு எதிராகவே உள்ளது. இதுவே எங்கள் நிலைப்பாடு. அதிலும் மாநில சாலைகளை தேசிய சாலைகளாக விரிவுபடுத்தி அதில் டோல் அமைப்பதை ஏற்க முடியாது.
அமைச்சர் பேச்சு: மாநில நெடுஞ்சாலைகளை எல்லாம் 4 வழி சாலையாக அமைக்க வேண்டும். விரிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பெயரில் சாலை மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கே பல சாலைகள் இப்படி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைகள் எதிலும் டோல்கள் போடப்படவில்லை.
மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இங்கே விரிவுப்பணிகள் நடந்தாலும் கூட டோல்கள் போடக்கூடாது என்று கூறியுள்ளோம். இங்கே குற்றஞ்சாட்டிய எம்எல்ஏ மாநில சாலையில் டோல் கேட் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அது என்ன சாலை.. மாநில சாலை விரிவுபடுத்தப்பட்டு பின் மத்திய அரசு போட்ட டோல் கேட்டா என்று பார்க்க வேண்டும். அதை பார்த்து நாங்கள் சரி செய்வோம். அதேபோல் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று இங்கே வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்கப்படும் என்று அமைச்சர் ஏவ வேலு கூறியுள்ளார்.
சென்னை டோல் கேட்: இன்னொரு பக்கம் சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடக்கும் நிலையில் முக்கியமான டோல்கேட் ஒன்றை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இதன் காரணமாக மக்கள் சாலைகளில் பயணம் செய்ய முடியவில்லை. இந்த சாலையில் வாகனங்கள் மிக மிக மெதுவாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகனங்கள் இங்கே ஊர்ந்து செல்லும் போதும் கூட இங்கே டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் நாவலூர் டோல் கேட்டை தற்காலிகமாக மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் இனி சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்க உள்ளன. இதை முன்னிட்டு இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தை இது இனி எளிதாக்கும் என்று அமைச்சர் ஏவ வேலு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications