வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு தடையில்லா சான்றிதழ்.. எப்ப தெரியுமா? தமிழக அமைச்சர் முத்துசாமி சர்ப்ரைஸ்
சென்னை: வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போதும்சரி, சொத்து மீது எந்தவிதமான கடன் அல்லது சட்டச் சிக்கலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் சரி, அனைத்துக்குமே தடையில்லாத சான்றிதழ் என்பது அவசியமாகும்.. மனைப்பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவே இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.. இந்நிலையில் தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate- NOC) என்பது ஒருவர் ஒரு செயலை நிறைவேற்ற முனையும்போது, அந்த செயலுக்கு தொடர்புடைய நபர் அல்லது நிறுவனம், அந்த செயலை நிறைவேற்றிக்கொள்ள தனக்கு தடை ஏதும் இல்லை என்று அந்நபர் சான்றிதழ் அளிப்பதாகும். இது ஒரு சட்டபூர்வமான சான்றிதழ் ஆகும்.

நிலம் உரிமையாளர்கள்
பொதுவாக, அப்பார்ட்மென்ட்களை வாங்க ஆர்வம் காட்டுவோர், நில உரிமை பத்திரம், திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையில்தான் கட்டுகிறார்களா? சிஎம்டிஏ அனுமதி உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும்.
அதேபோல, திட்ட அனுமதியின்படி பணிகள் முறையாக முடிந்ததற்கான சான்றிதழ் இருக்கிறதா என்பதையும், குடியிருக்க போகும் அடுக்குமாடி கட்டடம் பாதுகாப்பானது என்பதற்கான தீயணைப்பு துறை தரும் தடையின்மை சான்றிதழ் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வருங்காலத்தில் மிகப்பெரிய சிக்கல் வரக்கூடும். எனவேதான் இதற்கெல்லாம் தடையின்மை சான்றிதழ்கள் அவசியமானதாக திகழ்கிறது.
தடையின்மை சான்றிதழ்
அதாவது, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டங்களில் நிலம், வீடு வாங்கியவர்கள், அதை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நினைத்தால், அதற்கு வாரியத்திடம் தடையின்மை சான்றிதழ்களை கட்டாயம் பெற வேண்டும். வாரிய திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களில், அதன் உரிமையாளர்கள் வீடு கட்ட வேண்டும் என்றாலும்கூட, இந்த தடையின்மை சான்றிதழ்களை வாங்க வேண்டும்.
இந்த தடையின்மை சான்றிதழை பெற வேண்டுமானால், கோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் நிலைமை மட்டுமே இதுநாள் வரையில் நடைமுறையாக இருந்த வந்த நிலையில், சமீபகாலமாக ஆன்லைன் வசதியையும் நம்முடைய அரசு கொண்டு வந்துள்ளது..
அதன்படி, apply.tnhb-noc.com என்ற இணையதளம் வாயிலாக, பொதுமக்கள், தங்களுடைய விபரங்களை பதிவு செய்து, தடையின்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்..
வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்றைய தினம் பேசும்போது, "விருகம்பாக்கம் தொகுதி 136-வது வார்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டப்பட்டது. அது சேதமடைந்ததால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிஎம்டிஏ - அடுக்குமாடி குடியிருப்பு
சிஎம்டிஏவில் குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ல் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என ஒரு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டுவது கேள்விக்குறிதான். எனினும், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே வாடகைக்கு குடியிருப்பவர்கள் அதை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினால், அதற்கான வழிமுறைகளை பின்பற்றி, சட்ட சிக்கல் எதுவும் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மனை உரிமையாளர்களுக்கு தடையில்லா சான்று
வாரியத்திடம் வீட்டுமனை பெற்றவர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படாதது, கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் முழுவதுமுள்ள பிரச்சனையாகும்.. எனவே, இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதற்கு முதல்வர், ''சிறு தவறும் நேராத வகையில், எல்லோருக்கும் ஒரேமாதிரியாக தீர்வு காண வேண்டும்'' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வர் உதயநிதியிடமும் அறிவுறுத்தியுள்ளார். அதன்பிறகு, 2 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு நவம்பர் இறுதியில் வழங்க உள்ள அறிக்கையின் பரிந்துரைப்படி, மனை உரிமையாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications