Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் நீர் நிலை புறம்போக்கில் யாரும் அனுமதி வாங்க முடியாது.. அமைச்சர் முத்துச்சாமி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கூவம் ஆற்றின் பகுதியில் நீர் நிலை புறம்போக்காக இருந்தால் யாரும் அனுமதி வாங்க முடியாது அரசு கண்டிப்பாக அனுமதியும் வழங்காது என்று அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளளார்.

அண்மையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றிலிருந்து பங்காரு கால்வாய் பிரிந்து செல்லும் இடத்திற்கு அருகில், கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள 11.50 ஏக்கர் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட அனுமதிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆய்வு செய்து வருவதாகவும், இதற்கான தொடக்கக்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

No one can get building permission at water diversion site in Chennai: Minister Muthusamy

ஈரோடு அருகே ரங்கம்பாளையம் தனியார் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி பங்கேற்று வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்குப் பணி ஆணையை வழங்கினார்.

பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நடவடிக்கை, மிகவும் ஆபத்தான விளையாட்டு ஆகும். கூவம் ஆற்றில் வழக்கத்தை விடக் கூடுதலாக சில ஆயிரம் கன அடிகள் தண்ணீர் திறந்து விடப்பட்டால் கூட அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது வாடிக்கை. கடந்த காலங்களில் கூவம் ஆற்று வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட பேரழிவுகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.ஆபத்து உள்ளது.

இத்தகைய சூழலில் கூவம் ஆற்று வெள்ளப்பகுதியில் அமைந்திருக்கும் 11.50 ஏக்கர் நிலப்பரப்பை நகர்ப்புறம் அல்லாத பயன்பாட்டுக்கான பகுதி என்ற நிலையிலிருந்து, குடியிருப்புகள் கட்டுவதற்கான பகுதி என்று வகைப்பாடு மாற்றம் செய்வது குறித்து நேற்று (டிச.14) நடைபெற்ற பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 276 ஆம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு இந்த வகைப்பாடு மாற்றத்திற்கு அனுமதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சர்ச்சைக்குரிய நிலத்தின் வருவாய் ஆவணங்கள் தெளிவாக இல்லாத சூழலில், அந்த நிலத்தைக் குடியிருப்பு பகுதியாக மாற்ற நீர்வளத்துறையும் நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தின் மட்டத்தை 4.325 மீட்டர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பது நீர்வளத் துறையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். அவ்வாறு செய்யப்பட்டால் அதைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் நுழையும் ஆபத்து உள்ளது" என்று ராமதாஸ் கூறியிருந்தார்.

இதனிடையே இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த முத்துச்சாமியிடம், பாமக நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து பேசுகையில், நீர்நிலை பகுதியாக இருந்தால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து இருக்காது, அனுமதியும் வழங்கி இருக்காது. மேலும், நீர் நிலை புறம்போக்காக இருந்தால் யாரும் அனுமதி வாங்க முடியாது என்று கூறினார்.

சேலம் மார்டன் தியேட்டர் விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளரின் 3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு என்று வீட்டு வசதி வாரியத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் முத்துச்சாமி, இது குறித்து வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரிகளிடம் விசாரித்துக் கேட்டுச் சொல்லுகிறேன். வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை" என முத்துச்சாமி தெரிவித்தார்.

மிக்ஜாம் புயல் குறித்து பேசிய அமைச்சர் 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. சென்னையில்
மழைநீர் வடிகால் பணிகள் 60சதவீதம் நிறைவடைந்துள்ளது. வடிகால் பணிகள் முழுவதும் முடிந்து இருந்தால் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. இதிலும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் வடிகால் பிரச்சினை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டது.

அரசு வடிகால் அமைத்த போதிலும் மழைநீர் விரைந்து வடியாததற்குப் பொதுமக்கள் நீர்நிலைகள் செல்லும் வழியில் குப்பைகளைக் கொட்டுவது தான் பிரச்சினையாக இருக்கிறது. மழைநீர் வழிகளில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை தயவு செய்து கொட்டவேண்டாம்" என அமைச்சர் முத்துச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+