உங்க மெத்தனத்தால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி.. உதயநிதி, அன்பில் மகேஷை டார்கெட் செய்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை : தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார் செய்திருந்த மாணவர்களின் எதிர்காலம் திமுக அரசின் மெத்தனப் போக்கால் தற்போது கேள்விக்குறியாகி விட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அணி சார்பில் வீரர்களை தேர்வு செய்து அனுப்பாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போட்டிகளில் பங்கேற்க 247 மாணவர்களை அனுப்புமாறு லக்னோவில் இருந்து விளையாட்டு குழுமம் சார்பில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உடற்கல்வி முதன்மை ஆய்வாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதனை பள்ளிக்கல்வித்துறை கவனிக்காமல் விட்டதால் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க இயலவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "School Games Federation of India, பள்ளி மாணாக்கர்களுக்காக வருடந்தோறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழக்கம். இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் Form-4 சான்றிதழ்கள் விளையாட்டு வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறவும் வாய்ப்பாக அமையும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு SGFI 301 மாணவர்களுக்கு வாய்ப்பளித்து அனுப்பிய அறிக்கையை இந்த விடியா திமுக அரசு முறையாக கையாளாமல் பாராமுகமாக இருந்ததன் விளைவாக இன்றைக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் விளையாட்டுத் துறையில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர்.

அயராத உறுதியாலும் உழைப்பாலும் தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டிற்காக தங்களை முழுமையாக கட்டமைத்துக் கொண்டு, தயார் செய்திருந்த மாணவர்களின் எதிர்காலம் இந்த அரசின் மெத்தனப் போக்கால் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

No one from tamilnadu participate in national sports : Edappadi palanisamy condemns dmk government

தனது நிர்வாகத் திறமையின்மையால் விளையாட்டுத் துறையில் தமிழக மாணவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பை கிடைக்கவிடாமல் செய்த இந்த கையாளாகாத அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு காரணமான பள்ளி கல்வித்துறை அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் இனிவரும் காலங்களிலாவது தங்கள் துறை சார்ந்த பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+