வீடுகளுக்கு முன்பு "நோ பார்க்கிங்" போர்டு! வாகன ஓட்டிகளுக்கு ரூல்ஸ் மாறுது.. சென்னை காவல்துறை அதிரடி
சென்னை : நோ பார்க்கிங் பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது என்று பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.. பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என்றும் போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் "நோ பார்க்கிங்" சைன்போர்டுகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளது.

அங்கீகாரம்: முறையான அங்கீகாரம் இல்லாமல் பொது சாலைகளில் மற்ற தடைகள் இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுகிறது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி. "நோ பார்க்கிக் பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது.
நோ பார்க்கிங்: மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்:-
- அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். விதிமீருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
- அங்கீகரிக்கப்படாத இடங்களில் நோ பார்க்கிங் பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்
- பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சரக போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்.
- சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விதிமீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க நகரம் முழுவதும் வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளும். இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதற்கும் மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications