Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத உணர்வுகளைத் தூண்டி... அரசியல் லாபம்.. இங்கு இடமில்லை... டிடிவி தினகரன்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் விதமாக கந்த சஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தியது வன்மையான கண்டனத்திற்குரியது. எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

No place to Insulting the leaders inciting religious sentiments says TTV Dhinakaran

இதுகுறித்து இன்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், ''கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் சம்பவங்கள் அருவெறுக்கத்தக்கவையாக அமைந்திருக்கின்றன. பகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் விதமாக கந்த சஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தியது வன்மையான கண்டனத்திற்குரியது. எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.

தலைவர்களை இழிவுபடுத்தியும், மத உணர்வுகளைத் தூண்டியும், அவற்றின் வழியாக அரசியல் லாபம் பார்க்க யார் நினைத்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணில் இடமில்லை.

மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது, தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி பழனிசாமி அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    kandha Sasti Kavasam : Karuppar koottam Office-க்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல்

    கோயம்புத்தூரில் நேற்று பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீசியதற்கும் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலை அவமரியாதைக்கு குரல் கொடுப்பவர்கள் ஏன் கந்த சஷ்டிக்கு குரல் கொடுக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+