தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் மறுவாக்குப்பதிவு இல்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை லோக்சபா தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், மாநிலத்தில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நமது நாட்டில் இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 102 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு: தமிழ்நாடு முழுக்க 69% வாக்குகள் பதிவானது. மாநிலத்திலேயே அதிகபட்சமாகத் தருமபுரியில் 81.48% வாக்குகள் பதிவானது. இது தவிர கள்ளக்குறிச்சி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக இருந்துள்ளது. தலைநகர் சென்னையில் தான் இந்த முறையும் வாக்குப்பதிவு குறைவு. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதேபோல மத்திய சென்னை, தென் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்தது.
தேர்தல் நடந்த வெள்ளிக்கிழமை, செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு மாநிலத்தில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றதாகத் தெரிவித்தார். சில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தவிரத் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவே சத்யபிரதா சாகு அறிவித்தார்.
மறுவாக்குப்பதிவு இல்லை: பொதுவாகத் தேர்தல் சமயத்தில் எதாவது ஒரு இடத்தில் குழப்பம் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவில் பிரச்சினை இல்லை என்பதால் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்த நிலையில், அதில் மாநிலம் முழுக்க வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்தும் தேர்தல் அதிகாரிகளும் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். இவர்கள் தான் எந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைப்பார்கள்.
அறிவிப்பு: இதற்கிடையே தேர்தல் அதிகாரிகள் எந்தவொரு இடத்திற்கு மறுவாக்குப்பதிவுக்குப் பரிந்துரைக்கவில்லை என்பதால் மாநிலத்தில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications