Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் தேர்தல் வருதுன்ற கரிசனம் கூட இல்லை! பட்ஜெட்டில் வன்மம்! செல்வப்பெருந்தகை அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறும் நிலையில் எந்த திட்டத்தையும் மத்திய அரசு இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தொழிலாளர் நலன், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் இல்லை. தமிழகத்திற்கு தேவையான திட்டங்களும் இல்லை. பொதுவாக எந்த மாநிலத்திலாவது தேர்தல் நடந்தால் அங்கு கரிசனம் காட்டுவார்கள்.

selvaperunthagai budget

ஆனால் தமிழகத்திற்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தமிழகத்திற்கு அந்த கரிசனம் கூட இல்லை. அப்படியென்றால் தமிழகத்திற்கு எதிராக பாஜக அரசு எப்படி திட்டங்களை தீட்டுகிறது, தமிழகத்தின் மீது பாஜக அரசு எவ்வளவு வன்மம் வைத்திருக்கிறது என்பது நிதி நிலை அறிக்கை மூலம் தெரிகிறது.

தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, தற்போது மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுகிறது. சில மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கும் போது சோப் போடுவார்கள். அது கூட தமிழகத்திற்கு காணவில்லையே!

அப்படியென்றால் தமிழகத்தை ஒரு போதும் பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். இதுதான் நிதி நிலை அறிக்கையின் பொருளாக இருக்கிறது. ஆகவே இந்த நிதி நிலை அறிக்கை என்பது ஏழை எளிய மக்களோ, விவசாயிகளுக்கோ, தொழிலாளர்களுக்கோ, பெண்களுக்கோ பயனை கொடுக்கக் கூடிய நிதி நிலை அறிக்கை இல்லை.

பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான நிதி அறிக்கைதான் இன்று தாக்கல் ஆகியுள்ளது. முன்பெல்லாம் தமிழகத்திற்கான திட்டங்கள் என்று அறிவிப்பார்கள். ஆனால் அவற்றை செயல்படுத்த மாட்டார்கள்.

ஆனால் இன்று அந்த அறிவிப்புக் கூட இல்லை. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் என்னென்ன அறிவிப்புகளை செய்கிறாரோ அதையெல்லாம் நிறைவேற்றுகிறார். அப்படி நிறைவேற்றும் போது அந்தந்த துறைகளுக்கான திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மத்திய அரசு அறிவிப்போடு நிறுத்தி விடுகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அரசு அறிவித்து 10 ஆண்டுகளாகிவிட்டது. ஏன் இதுவரை நிறைவேற்றவில்லை. இதுதான் பாஜகவின் நிதி நிலை. இதுதான் பாஜகவின் மாடல் அரசு. ஆகவே தமிழ்நாடுதான் இந்தியாவை தூக்கி பிடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கைதான் இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருக்கிறது. ஜிடிபியிலும் தமிழகம்தான் முதன்மையாக திகழ்ந்து மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுப்பதும் கூட்டாட்சி தத்துவத்தை விரும்பாத ஒரு அரசுதான் மத்திய அரசு. அந்த அடிப்படையில்தான் அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லா மாநிலங்களுக்கும் தமிழகத்தின் நிதியை ஜிஎஸ்டியில் இருந்து பிரித்துக் கொடுக்கிறார்கள்.

ஆனால் நிதி அளிக்க வேர்வையும் ரத்தமும் சிந்தி நாம் செலுத்துகிற வரியை தமிழகத்திற்கு கொடுக்க மறுக்கிறார்கள். இதுதான் பாஜக அரசு என்பதை தமிழக மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தமிழகம் , தமிழக மக்களின் வாழ்வாதாரம் புறக்கணிப்பை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் தமிழக சட்டசபை தேர்தலில் வாக்கு மூலம் அவர்கள் பதிலளிப்பார்கள். 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

எப்படி வேளாண்மை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த போது நாடு முழுவதும் எதிர்ப்பு வந்ததோ, அது போல் மகாத்மா காந்தியின் பெயரை அந்த திட்டத்தில் இருந்து எடுத்ததும் நாடு முழுவதும் எதிர்ப்பலை வீசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் அறிவித்த விபி ஜி ராம் ஜி என்ற திட்டம் கூட செயல்படுத்தப்படாமல் ஏட்டில் மட்டுமே இருக்கும் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+