திமுக கூட்டணியை எதிர்க்கும் கூட்டணி இன்னும் உருவாகவே இல்லை.. விஜய்லாம் என்ன செய்வாரோ?: திருமாவளவன்
கடலூர்: தமிழகத்தில் திமுக கூட்டணியை எதிர்க்கும் அணி இன்னும் உருவாகவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "மே 31 ஆம் தேதி வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற இருந்த மதச்சார்பின்மை காப்போம் பேரணி வருகின்ற ஜூன் 14ஆம் தேதி நடைபெறும்.

சிப்காட் தொழிற்பேட்டையின் காரணமாக காற்று, குடிநீர் உள்ளிட்டவை மாசு அடைந்து பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, முதலமைச்சரிடம் கோரிக்கையை முன் வைப்போம்.
நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக கூட்டணி மட்டும் தான் வடிவம் பெற்ற வலுவான அணியாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் அணி இதுவரை உருவாகவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்பதே தெரியவில்லை. விஜய் என்ன செய்யப்போகிறார் என்றே தெரியவில்லை. விசிகவை பொறுத்தவரை நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். அதில் தொடர்வோம். அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.
டாஸ்மாக் ஊழல் என்பது ஒரு கற்பிதம். வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என திமுக அதில் ஊழல் நடந்திருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் வருகிற 31 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். "மதச்சார்பின்மை காப்போம்" என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications