பணக்கார ஆண்களுடன் முதலிரவு நடத்தாமலேயே.. யாரிந்த தில்லாலங்கடி பெண்.. தங்க நகைகளில் மூழ்கிய குடும்பம்
சென்னை: திருமண மோசடிகள் அதிகரித்து வருகின்றன.. இதற்கு ஆண்கள், பெண்கள் விதிவிலக்கல்ல.. திருமணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை பறிக்கவே புரோக்கர்கள் கும்பல்கள் சில உள்ளன.. அல்லது ஆண்களோ, பெண்களோ இதுபோன்ற திருமண மோசடிகளில் இறங்குவார்கள்.. ஆனால், ஒரு குடும்பமே ஒட்டுமொத்த போலீசுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இது தொடர்பானவர்களும் கைதாகி விசாரணைக்கு உள்ளாகி உள்ளனர். என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பகத்சிங், இவருக்கு காஜல், தமன்னா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.. அதேபோல ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் தாராசந்த் ஜாட்.. இவருக்கு பன்வர்லால் மற்றும் சங்கர்லால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் பகத்சிங்கும், தாராசந்த் ஜாட் இருவரும் யதேச்சையாக சந்தித்துள்ளனர். ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பேசியிருக்கிறார்கள். அப்போது பகத்சிங், தனக்கு என்ற 2 பெண்கள் இருப்பதாகவும், அவர்களை பன்வர்லால் மற்றும் சங்கர்லால் ஆகியோருக்கும் திருமணம் செய்து வைப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
2 மகன்கள், 2 மணப்பெண்கள்
இதைக் கேட்டதுமே மகிழ்ச்சியடைந்த தாராசிந்த், இந்த திருமணத்துக்கு சம்மதித்தார்.. உடனே பகத்சிங், திருமண ஏற்பாடுகளை செய்வதாக சொல்லி, ரூ.11 லட்சத்தை தாராசிந்த்திடமிருந்து பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு, மே 21ம் தேதி, பகத்சிங் தன்னுடைய மனைவி சரோஜ், மகன் சூரஜ் மற்றும் இரு மகள்களுடன் விருந்தினர் மாளிகைக்கு வந்து, தாராசந்தின் மகன்களுக்கு தன்னுடைய மகள்களைத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு 2 நாட்கள் மாப்பிள்ளை வீட்டில் பகத்சிங்கின் குடும்பத்தினர் தங்கியிருந்தனர். ஆனால், 3வது நாளன்று, பகத்சிங் குடும்பத்திலிருந்து ஒருத்தரையும் காணவில்லை.. அத்துடன் தாராசந்த் வீட்டில் வைத்திருந்த நகைகள், பணம், துணிமணிகள் என அத்தனையையும் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிவிட்டிருந்தனர்,
பணம், நகைகள்
இதனால் அதிர்ச்சி அடைந்த தாராசந்த், தந்தாராம்கர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், கடந்த டிசம்பர் 18ம் தேதி பகத்சிங் மற்றும் அவரது மனைவி சரோஜை போலீசார் கைது செய்தனர்..
அந்த தம்பதியிடம் விசாரணையையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான் அந்த குடும்பமே மோசடியானது என்பது தெரியவந்தது.. பலரிடமும் இப்படி நெருங்கி பழகி, தங்கள் 2 மகள்களையும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, மோசடி செய்து வந்துள்ளதும், இதற்கு 2 மகள்களம் உடந்தை என்பதும் அம்பலமானது. இதையடுத்து தமன்னா மற்றும் சூரஜையும் போலீசார் கைது செய்தனர்.
ஆனால், இந்த மோசடி கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான காஜல் மட்டும் தலைமறைவாகி விட்டார்.. கடந்த ஒரு வருடமாகவே அவரை போலீசார் தேடி வந்தனர்.. ஜெய்ப்பூர் மற்றும் மதுராவில் சில காலம் தங்கியிருந்த காஜல், குருகிராமுக்கு வந்து சரஸ்வதி என்கிளேவ் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்திருக்கிறார்.
மூளையாக செயல்பட்ட பெண்
இந்நிலையில், சிகார் போலீசார், குருகிராம் போலீசாருடன் உதவியுடன் நேற்று காஜலைக் கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டபோது, பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக கூறினார்.
போலீசாரிடம் காஜல் அளித்த வாக்குமூலத்தில், 'என்னுடைய அப்பா பகத்சிங் திருமண மோசடி திட்டத்தை உருவாக்கினார். பணக்கார குடும்பங்களை குறிவைத்து நானும், தமன்னாவும் திருமணம் செய்துகொள்வோம். திருமணத்தின் மூலம் அவர்களின் நம்பிக்கையை எளிதில் பெற்றுவிடுவோம். இந்த வியாபாரத்தில் எங்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டது' என்றார்.
பகீர் வாக்குமூலம்
அதேபோல விசாரணை அதிகாரி பூரன்மால் இதுகுறித்து சொல்லும்போது, மணமகள் குடும்பத்தினர் எப்போதுமே, மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே தங்குவார்கள்.. அந்த 3 நாட்களுமே மணமகன்களுடன் முதலிரவு நடத்துவதில்லை. ஏதேதோ சாக்கு போக்குகளை, அந்த 3 நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபட மாட்டார்கள்.
அதற்கு பிறகு பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பிவிட்டது. இந்த கும்பல் இதேபோன்று பலரை ஏமாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு வலுத்துள்ளது. எனவே இந்தக் கும்பலின் மற்ற கூட்டாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தேடி வருகிறோம் என்று உறுதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications