15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு!
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 முதல் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு தேர்தலில் கூட ஒரு சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இணைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கியது திமுக. இதையடுத்து, தேமுதிகவின் பொருளாளர் எல்.கே. சுதீஷ், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு 10 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. விசிகவுக்கு 8 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 10 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது கூட்டணிக்குள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்ததை திமுக தொண்டர்களும் விமர்சித்துள்ளனர்.
2016 ரிசல்ட்
2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அதில் விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 22 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மாநில அளவில் 0.77% வாக்குகளைப் பெற்றது; எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறல்லை.
அதே சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக எந்தத் தொகுதியிலும் வெல்லவில்லை. பல இடங்களில் டெபாசிட் இழந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் தோல்வி அடைந்தார்.
2021 ரிசல்ட்
2021 சட்டசபை தேர்தலில்திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது (திருப்போரூர், நாகை, கட்டுமன்னார்கோவில், கீழ்வேளூர்). 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் சராசரி 42.58% வாக்குகளைப் பெற்றது. மாநில அளவில் சுமார் 1% பெற்றது.
2021 சட்டசபை தேர்தலில், அமமுக உடன் கூட்டணி அமைத்த நிலையில் 60 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. 60 தொகுதிகளில் போட்டியிட்டு எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. 0.43% வாக்குகளைப் பெற்றது (மொத்தம் 2,00,156 வாக்குகள்).
தேமுதிகவுக்கு அதிக சீட்
விசிக, திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் நிலையில், 2019 லோக்சபா தேர்தலில் 2ல் போட்டியிட்டு 2ல் வெற்றியும், 2021 சட்டசபை தேர்தலில் 6ல் போட்டியிட்டு 4ல் வெற்றியும், 2024 லோக்சபா தேர்தலில் 2ல் போட்டியிட்டு 2ல் வெற்றியும் பெற்றிருந்தது. தேமுதிகவோடு, இந்த தேர்தல்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் விசிகவை விட தேமுதிகவுக்கு அதிக சீட் வழங்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications