பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு என்ன கதி தெரியுமா? கனிமொழி எம்.பி 'சரவெடி' தாக்கு
சென்னை: நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி. கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை திமுக கிழக்கு மாவட்டத்தில் மகளிருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி எம்பி பேசியதாவாது: பா.ஜ.க ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களின் கல்விக்காகவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதத்தாலும், சாதியாலும் பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒருபோதும் தமிழ்நாட்டில் இடம் அளிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் பெண்களின் உரிமைக்காகவும் அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் பெரும் பங்காற்றியது தி.மு.கதான். பெண்கள் கல்லூரிக்குச் செல்லவேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி அவர்களது வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். தற்போது உலகத்திற்கே வழிகாட்டியாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களது உரிமையை அங்கீகரித்துள்ளார். இந்த திட்டத்தைப் பெண்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications