சென்னையில் ரூ.270 கோடியில் R&D சென்டரை திறந்த நோக்கியா! பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும் தமிழ்நாடு!
சென்னை: உலக அளவில் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா, தமிழ்நாட்டில் தனது மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தைத் திறந்துள்ளது. ரூ.270 கோடி முதலீட்டில் திறக்கப்பட்டிருக்கும் இந்த மையம், சுமார் 200 பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும்.
கடந்த 2024ம் ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, தமிழக அரசுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மையம் உருவாக்கப்பட்டது. இந்த மையம் 10G முதல் 100G வரை ஆப்டிகல் நெட்வொர்க்குகள், ஃபிக்சட் வயர்லெஸ் ஆக்சஸ் போன்ற தொழில்நுட்பங்களில் புதுமைகளை இங்கு சோதனை செய்து பார்க்கிறது.

திட்டத்தின் முதல் கட்ட முதலீடு ₹220 கோடியில் இருந்து ₹270 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்திற்கு சுமார் ₹300 கோடி ஒதுக்கப்படும். இந்த மையம் 200க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில், நோக்கியா ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் 5G ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க் துறையில் வணிக ஒப்பந்தங்களை கொண்டுள்ளது.
சிறுசேரி மையத்தில், நோக்கியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் R&D ஆய்வகம் செயல்பட்டு, மேம்பட்ட பிராட்பேண்ட் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது. தற்போது, தமிழகத்தில் நோக்கியாவில் சுமார் 1,000 பொறியாளர்கள் பணிபுரிகின்றனர்.
சிறுசேரி மையம் என்பது, இது உலகம் முழுவதும் உள்ள நோக்கியாவின் ஃபிக்ஸட் நெட்வொர்க் பிரிவிற்கான முதன்மை ஆராய்ச்சி மையமாகச் செயல்படும். 10G, 25G, 50G மற்றும் 100G வரையிலான மிக அதிவேக ஆப்டிகல் நெட்வொர்க் (Broadband) தொழில்நுட்பங்கள் இங்குதான் சோதிக்கப்பட்டு உருவாக்கப்படும்.












Click it and Unblock the Notifications