#Nomeansno: பாலியல் கொடுமைகளுக்கு எதிராக Josh ஆப் முன்னெடுக்கும் பிரச்சாரம்.. குவியும் ஆதரவு!
சென்னை: இந்தியாவின் நம்பர் 1 ஷார்ட் வீடியோ ஆப்தான் Josh. தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மக்கள் இடையே இந்த Josh ஆப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுவராசியமான வீடியோக்கள், டிரெண்டுக்குள் என்று இளசுகள் மத்தியில் Josh ஆப் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறது.
பல்வேறு விருது நிகழ்ச்சிகள், போட்டிகள், சுவாரசியமான டிரெண்டுகள் மூலம் Josh தனது பயனாளர்களுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. ஜாலியான வீடியோக்களில் எப்போதும் டாப்பில் இருக்கும் Josh பல முறை சமூக பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவிகள் சென்று சேர Josh ஆப் முக்கிய காரணியாகவும் இருந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் Josh ஆப் புதிய பிரச்சாரம் ஒன்றின் மூலம் தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தி உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக #Nomeansno என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை Josh ஆப் தொடங்கி உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிறிய பெண் குழந்தைகள் கூட பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் அவலம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் பல இடங்களில் பள்ளிகளிலேயே பெண் சிறுமிகள் பாலியல் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள்.
அதிலும் தமிழ்நாட்டில் இப்படி அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பாலியல் கொடுமைகளுக்கு பறிகொடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிரபல பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது. அதன்பின் கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்டது. பின்னர் கரூரில் மாணவி தற்கொலை செய்து கொண்டது என்று நாளுக்கு நாள் பள்ளிகளில் நடக்கும் கொடூரமும் வெளியே வந்து கொண்டு இருக்கிறது.
இதற்கெல்லாம் ஒவ்வொரு முறையும் நாம் #justicefor என்று கூறி டேக் மட்டுமே டிரெண்ட் செய்து வருகிறோம். மாறாக பலருக்கு இதில் நீதி கிடைப்பது இல்லை. இந்த நிலையில் மக்கள் இடையே இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் Josh ஆப் #Nomeansno என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. இந்த பிரச்சாரத்தை தொடங்கிய உடனே அதற்கு Josh ஆப்பில் பலரும் ஆதரவு தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.
முக்கியமாக தென் மாநிலங்களில் இருந்து பலர் இந்த டேக்கின் கீழ் வீடியோ பதிவேற்றி வருகிறார்கள். மிக முக்கியமாக தமிழ்நாடு, கேரளா போன்ற பல மாநிலங்களில் இருந்து மக்கள் வீடியோக்களை இந்த டேக்கில் பதிவேற்றி வருகிறார்கள். இப்படி ஒரு சமூக பொறுப்புள்ள #Nomeansno பிரச்சாரத்தை Josh ஆப் தொடங்கியதற்கு யூசர்கள் பலர் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
இர்ஷா:
இந்த டேக்கில் வீடியோ வெளியிட்ட இர்ஷா என்ற பெண்மணி, பலரும் தங்களிடம் இருக்கும் மனித தன்மையை பல்வேறு காரணங்களாக இழந்து வருகிறார்கள். மனிதத்தன்மைதான் ஒருவருக்கு மிக முக்கியம். மனிதத்தன்மை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய குணம். பாலியல் கொடுமைகளுக்கு எதிராக Josh ஆப் இப்படி ஒரு பிரச்சாரத்தை செய்வது எனக்கு மிகுந்த நம்பிக்கையை, மகிழ்ச்சியை அளிக்கிறது.
பிரியமதி:
"No means No" டேக்கில் வீடியோ வெளியிட்ட பிரியமதி என்ற பெண்மணி, Josh ஆப் வெறும் பொழுதுபோக்கு ஆப் மட்டும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் இந்த ஆப் பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. கொரோனா காலத்தில் கூட ஏழை மக்களுக்கு உதவும் வகையில் #iambluewarrier என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் திரட்டப்பட்ட நிதி மூலம் 3 கோடி ரூபாய் உதவி ஏழை மக்களுக்கு சென்று சேர்ந்தது. இப்போது இவர்கள் NO MEANS NO பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். அனைத்து பாலின மக்களின் உணர்வுகளை மதித்து இந்த பிரச்சாரத்தை Josh செய்கிறது. இதன் மூலம் மற்ற செயலிகளை விட Josh எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது தெளிவாக தெரியும். இதுபோன்ற பிரச்சாரங்கள் மூலம் Josh புதிய உயரத்தை தொடும் என்று நம்பலாம். நன்றி.
இன்னும் பலர் #Nomeansno டேக்கில் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள். நீங்களும் இப்போதே Josh ஆப்பிற்கு சென்று உங்களின் வீடியோவையும் இந்த டேக்கில் பதிவேற்றலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications