தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்.. வேட்பாளர்கள் அறிய வேண்டியது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 40 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு அளிக்கும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமக, அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக ஆகியவை மூன்று அணிகளான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன.
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக இன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது.. அதிமுகவை பொறுத்தவரை நாளை அல்லது நாளை மறு நாள் வேட்பாளர்களை அறிவிக்கும் என தெரிகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை. வேட்புமனுக்களை வரும் 27-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம்.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள லோக்சபா தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் லோக்சபா தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுக்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக்கொள்வார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரி இல்லாத நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
வேட்பாளர்கள் வேட்புமனுக்கான விண்ணப்பங்களை, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை கம்ப்யூட்டரிலேயே தட்டச்சு செய்து பூர்த்தி செய்து, அச்சு நகல் எடுத்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கலாம். ஆன்லைன் மூலமாக பிரமாணப் பத்திரத்தை, சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். ஆனால் ஆன்லைன் மூலம் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. வேட்பு மனுவினை தேர்தல் அலுவலகத்திற்கு வந்து தாக்கல் செய்ய வேண்டும்.. அத்துடன் டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரத்தை அளிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான டெபாசிட் தொகை ரூ.12 ஆயிரத்து 500 ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டும் (மொத்தம் 5 பேர்) உடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனுக்கள் பெறப்படும் நிகழ்வு கண்டிப்பாக வீடியோ பதிவு செய்யப்படும். வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்பாளரின் வாகனத்துடன் வரும் மற்ற வாகனங்களில் பயணிப்போரின் தேர்தல் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு அதுவும் பதிவு செய்யப்படும்.
இதேபோல, ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பிருந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை புதிய வங்கி கணக்கினைப் பராமரிக்க வேண்டும். அந்த வங்கி கணக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் வழங்க வேண்டியது கட்டாயம். புகைப்படத்தில் கட்சி சின்னம், கொடி குறித்த எந்த அடையாளமும் கண்டிப்பாக இருக்கக்கூடாது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்களாக இருந்தால் ஒரு முகவரும், இதர வேட்பாளராக இருந்தால் 10 முகவராலும் முன்மொழிந்திருக்க வேண்டும். முன்மொழியும் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications