நாமினி பதிவு செய்யலையா? வாழ்வுச் சான்றிதழ் பிரச்சனையா? இதை எப்படி சரி செய்யணும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இபிஎஃப் அதாவது வருங்கால வைப்பு நிதி தொடர்பாக பலருக்கும் இருக்கும் சந்தேகங்களுக்கு நேரடியாக விளக்கம் கிடைக்க உள்ளது. இபிஎஃப் பணம் தொடர்பாக ஏதாவது குறை இருந்தாலோ, நாமினி பதிவு செய்ய வேண்டியிருந்தாலோ, ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியிருந்தாலோ யாரை அணுகுவது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நேரடியாக உதவி கிடைக்கும் வகையில் சென்னையில் இன்று சிறப்பு இபிஎஃப் முகாம் நடைபெறுகிறது.

தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்படும் இபிஎஃப் தொகை, எதிர்காலத்துக்கு உதவும் முக்கியமான சேமிப்பாக இருக்கிறது.

EPF Savings EPF Money EPF Nominee

இபிஎஃப் அதாவது வருங்கால வைப்பு நிதி

ஊழியரின் பங்களிப்புடன் நிறுவனத்தின் பங்களிப்பும் சேர்ந்து இபிஎஃப் கணக்கில் பணம் சேரும். வேலைக்காலத்தில் சேமிக்கப்படும் இந்தத் தொகை, ஓய்வுக்காலத்தில் பொருளாதார பாதுகாப்புக்கு உதவுகிறது... முக்கியமாக விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவையான நேரங்களில் பணத்தைப் பெறும் வசதியும் உள்ளது. ஓய்வூதியம் தொடர்பான வசதிகளும் இதில் உள்ளன.

அதுமட்டுமல்ல, குடும்பத்தினரை நாமினியாக பதிவு செய்து வைப்பது, மின்-நாமினேஷன் செய்வது, கணக்கு தொடர்பான சில பணிகளை இணையவழியில் மேற்கொள்வது என நிறைய வசதிகளும் உள்ளன.. ஆனால், இவைகளில் ஏதாவது பிரச்சனை வந்தால் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் பலர் தவிப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்காகத்தான் சென்னையில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.. இபிஎஃப் உறுப்பினர்கள் தங்களது குறைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சனைகளை நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். உறுப்பினர்கள் மட்டுமல்ல.. முதலாளிகள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

"நிதி ஆப்கே நிகாத் 2.0" திட்டம்

"நிதி ஆப்கே நிகாத் 2.0" திட்டத்தின் கீழ் செப்டம்பர் 28-ம் தேதி அதாவது இன்று திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை முகாம் நடைபெறுகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கலாம்.

சென்னை வடக்கு முகாம் பெரம்பூர் குக்ஸ் சாலையில் உள்ள இஎஸ்ஐ கிளை அலுவலகத்திலும், சென்னை தெற்கு முகாம் கீழ்ப்பாக்கம் தௌலத் டவர்ஸிலும் நடக்கிறது.. அம்பத்தூர் சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள இஎஸ்ஐ மருந்தக வளாகத்திலும் முகாம் நடைபெறுகிறது.

இங்கே குறைகளை மட்டும் சொல்லிவிட்டு வர வேண்டியதில்லை. முதலாளிகள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கான இணையவழிச் சேவைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். ஊழியர்களுக்கான ஆன்லைன் வசதிகள், இபிஎஃப் சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு பெற்ற நிறுவனங்களுடனான தொடர்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்படும்.

டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ்

முக்கியமாக ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இபிஎஃப் உறுப்பினர்கள் மின்-நாமினேஷனை தாக்கல் செய்து பதிவேற்றவும் நேரடியாக உதவி பெறலாம்.

அதாவது, இபிஎஃப் கணக்கு தொடர்பாக ஏதாவது குறை இருந்தாலும் சரி, ஆன்லைன் சேவை புரியவில்லை என்றாலும் சரி, நாமினி பதிவு அல்லது வாழ்வுச் சான்றிதழ் தொடர்பான பணியாக இருந்தாலும் சரி, நேரடியாகவே அதிகாரிகளை சந்தித்து தெரிந்து கொள்ளவும், தேவையான உதவியைப் பெறவும் இந்த முகாம் ஒரு பெஸ்ட் சான்ஸாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+