பாஜகவை வீழ்த்துவதே இலக்கு.. அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள, பிறந்தநாள் விழாவில்.ஸ்டாலின் அறைகூவல்
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: 2024ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது என்று கூறிய ஸ்டாலின், தேர்தலுக்கு பின்னான கூட்டணி என்பது நடைமுறைக்கு சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேபோல் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தப் பொதுக்கூட்டம் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 1990களில் இளைஞரணி செயலாளராக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். அதே உற்சாகத்துடன் தான் இப்போதும் இருக்கிறேன். நாங்கள் விதைத்த விதை தான் திமுக கம்பீரமாக நிற்க காரணம். அந்த விதையின் விளைச்சலால் தான் திமுக 6வது முறையாக ஆட்சியில் இருக்கிறது என்று தெரிவித்தார்.

பிறந்தநாள் பரிசு
தொடர்ந்து, சீனியர்களும், ஜூனியர்களும் என்னை வாழ்த்த வந்திருக்கிறார்கள். இது எனது பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையாக மட்டுமல்லாமல், இந்தியாவில் புதிய அரசியலுக்கான தொடக்க விழாவாகவும் அமைந்திருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே ஏற்கனவே பிறந்தநாள் பரிசை அளித்துவிட்டார்கள். ஆக்கப்பூர்வமாக செயல்திட்டத்தின் அடிப்படையில், ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளுடன் செயல்பட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் தான் சிறந்த பிறந்தநாள் பரிசு.

பாஜகவை வீழ்த்த வேண்டும்
இன்றைய காலத்திற்கு மிகமிக தேவை 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல். 2024ல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சியமைக்க கூடாது என்பதே முக்கியம். இந்தியாவை பிளவுபடுத்தி நினைக்கும் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும். பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒற்றை இலக்காக நினைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலும், வெற்றிபெறலாம் என்று சொல்லிவிடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலை தீர்மானத்தில் இழப்பு நமக்கு என்பதை கட்சிகள் உணர வேண்டும்.

காங்கிரஸ் அல்லாத கூட்டணி
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். அதேபோல், காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது.

40 தொகுதிகளிலும் வெற்றி
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக நிர்வாக யுத்தம் செய்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்கு போர் வியூகங்கள் அமைக்கக் கூடிய பாசறை கூட்டமாக பிறந்தநாள் கூட்டம் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தொண்டர்களுக்கு வரலாற்று கடமை இருக்கிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முழுமையாக வெற்றிபெற வேண்டும். 2004ம் ஆண்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றது போல், மீண்டும் நாம் கைப்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
-
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி!












Click it and Unblock the Notifications