Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடசென்னையே வளருது.. அம்பத்தூர் டூ முகப்பேர்.. இதென்ன புதுஸா அசத்துதே.. தமிழக அரசின் வேற லெவல் ப்ளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடசென்னையின் வளர்ச்சி இன்னும் அபாரமாக வளரப்போவதாக தெரிகிறது. இதுகுறித்து சிஎம்டிஏ பணிகள் விரிவடைந்துவரும் நிலையில், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தெரியவந்துள்ளது.

அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோகிளாஸ் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழும் பகுதி வடசென்னைஎன்றாலும், வளர்ச்சியை பொறுத்தவரை, இதுமிகவும் குறைவுதான்.

North Chennai and Will Ambattur be included in North Chennai Development Plan by TN Government

வடசென்னை: இத்தனைக்கும் இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத்திட்டமான துறைமுகம்-மதுரவாயல் பறக்கும்சாலை திட்டமும் வட சென்னையில்தான் அமைய உள்ளது. பெரிய தொழில் நகரம் பெரம்பூர் அமைந்திருப்பதும் வட சென்னையில்தான்.

அதாவது, மத்திய சென்னை, தென் சென்னையில் அபரிமிதமான வளர்ச்சி உள்ளது போல, வடசென்னையில் அபார வளர்ச்சி எதுவும் இல்லை. அதனால்தான், வடசென்னையையும் டாப் லெவலுக்கு கொண்டு வர தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்காகவே, தொழில் நிறுவனங்கள், பொழுது போக்கு அம்சங்கள் என்று பல அம்சங்களை இந்த வடசென்னையில் நிறுவி வருகிறது.

புதிய திட்டம்: தற்போது, "வட சென்னை வளர்ச்சி திட்டம்" என்ற புதிய திட்டத்தை உருவாக்கி, இந்த திட்டத்துக்காக ரூ.1000 கோடி 3 வருடங்களில் செலவிடப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.. இந்த பணிகளிலும் தற்போது கவனத்தையும் செலுத்தி வருகிறது.

அந்தவகையில், வடசென்னையில், அடிப்படை வசதிகள் முதல் அல்டிமேட் வசதிகள் வரை ஒன்றுவிடாமல் மாற்ற போகிறதாம்.. இதுகுறித்து சமீபத்தில்கூட நாம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதாவது, இன்னும் 5 ஆண்டுகளில் பெரம்பூர், செம்பியம், மதுரவாயல், கொரட்டூர், அயனாவரம், மாதவரம், சூரப்பேட்டை ஆகிய இடங்களில், 8 மாடிகளில் இருந்து, 35 தளங்கள் வரை வானளாவிய கட்டிடங்கள் என அனைத்துமே குடியிருப்பு வளாகங்களாக வரப்போகிறதாம்..

வடசென்னை மேம்பாட்டுத் திட்டத்தால் இந்த பகுதியில் 35 மாடிகள் வரை கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட உள்ளதாகவும், இதுவரை 10 தளங்கள்வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 35 மாடிகள் வரை இனி உயரப்போவதாகவும் சொல்கிறார்கள்.

புதுகோரிக்கை: முக்கியமாக, வடசென்னையின் ஃபேமஸ் பகுதியான காசிமேடு, மெரினா பீச் போலவே, நவீனப்படுத்தப்பட உள்ளதாம்.. மொத்தத்தில், வடசென்னைவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆரோக்கியம், விளையாட்டு, போக்குவரத்து, என அனைத்துமே மேம்பட போவதாக தகவல்கள் வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், சிஎம்டிஏவுக்கு புதுகோரிக்கை ஒன்று வந்துள்ளதாம்.

அதாவது, வடசென்னையை மேம்படுத்தும் பணியில், பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, 23 துறைகள் வாயிலாக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக, திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், ஆர்கே நகர், ராயபுரம், துறைமுகம், திருவிக நகர், வில்லிவாக்கம், எழும்பூர், கொளத்துார் ஆகிய 10 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 83 வார்டுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

சாத்தியமாகுமா?: இந்த திட்டத்துக்கான பணிகள் துவங்க உள்ள நிலையில், அம்பத்தூர் மண்டலம், அம்பத்தூர் தொழில்பேட்டை, முகப்பேர், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் ஆகிய பகுதிகளை, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கையாம்.

சிஎம்டிஏவின் சோஷியல் மீடியா பக்கங்களில் பொதுமக்கள், இந்த கோரிக்கையை வலிய பதிவிட்டு வருகிறார்களாம்.. இந்த கோரிக்கையானது, சிஎம்டிஏ அதிகாரிகள் கவனத்துக்கும் சென்றுள்ளதாக தெரிகிறது. எனவே, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் அம்பத்தூர், முகப்பேர் பகுதிகளும் சேர்க்கப்படுமா என்பது அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+