அதுக்குதான் சொல்றேன்.. வேற ஒருத்தருக்கு ஓட்டு போடுங்கன்னு.. அசத்தல் "நாம் தமிழர் காளியம்மாள்"

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளராக காளியம்மாள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நாம் தமிழர் வடசென்னை வேட்பாளர் யார் தெரியுமா?- வீடியோ

    சென்னை: அது ஒரு மீனவ குடும்பம்.. அப்பாவும் மகளும் இப்படி பேசி கொள்கிறார்கள்!

    அப்பா: ம்மா.. என்னம்மா.. நாம் தமிழர் கட்சியில போய் சேர்ந்திருக்கியே...

    மகள்:
    என்னப்பா செய்யட்டும்,.

    அப்பா: ரெட்டை இலைம்மா.. பாரு.. அப்பா கையில பச்சை குத்தி வெச்சிருக்கேன்

    மகள்: ஆமா குத்தினே.. அதுக்கு என்ன இப்போ?

    அப்பா: நாம மெஜாரிட்டி கட்சிம்மா

    மகள்: இருந்துச்சு.. ஒரு காலத்தில.. இப்போப்பா?

    அப்பா: 2000 ஆயிரம் ரூபா காசு தர்றாங்கம்மா

    மகள்: ஆமாப்பா கஜா புயலால் 3 லட்சம் சொச்சம் வீடு பாதிச்சது.. 1 லட்சம் வீடு கட்டி தந்திருக்காங்க..

    இன்னும் 2 லட்சம் வீடு இருக்கு. வீடு இல்லாதவங்க ஓஎல்லாம் என்ன தெருவுல நிப்பாங்களா? ஏம்ப்பா..

    பொங்கல் காசை வாங்காம எல்லாருக்கும் வீடு கட்டி தர சொல்லி இருக்கலாம் இல்லை?

    அப்பா: ஏம்மா.. ஒரு முதலமைச்சருக்கு இது தெரியாதா?

    மகள்: தெரியலப்பா.. அதுக்குத்தான் சொல்றேன் வேற ஒருத்தருக்கு ஓட்டுப்போடுங்கன்னு!"

    காளியம்மாள்

    காளியம்மாள்

    இப்படி பெற்ற தந்தையிடம் விவாதம் செய்தவர்தான் காளியம்மாள். மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். மீனவ பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வருபவர். அது மட்டுமில்லை.. இவர் ஒரு பிகாம் பட்டதாரி.

    சீமான் வேட்பாளர்

    சீமான் வேட்பாளர்

    இவர்தான் நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் ஆவார். மாநில மீனவ பெண் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர். பொதுவாக சீமானின் வேட்பாளர்கள் என்றாலே அதில் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும்.

    அழுத்தமான கொள்கை

    அழுத்தமான கொள்கை

    அந்த வகையில் காளியம்மாள் அனைவரையும் ஈர்த்தவர். சாமானிய மக்களின் குரலை தனது வெளிப்படை மற்றும் யதார்த்த பேச்சுகளில் வெளிப்படுத்தி வருபவர். எளிமையான தோற்றம்! இயல்பான பேச்சு! தெளிவான உச்சரிப்பு! அழுத்தமான கொள்கை! இதுதான் காளியம்மாள்!

    அறிவே இல்லையா?

    அறிவே இல்லையா?

    இவர் பேசும்போது, "நீச்சல் தெரியாத கடற்படை வீரர்.. அவரை காப்பாற்றுவது ஒரு மீனவர்.. இதுதான் நம்ம தமிழ்நாட்டின் தலைவிதி. இந்த கடலில் இறங்கி மீன்பிடிக்கும் எங்களுக்கு மீன்வளத்துறையிலோ கடற்படையிலோ வேலை கிடையாது. ஏன்? எங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? நாங்கள் எல்லாம் படிக்கவே இல்லையா?" என சுருக் நறுக் கேள்விகளை எழுப்புகிறார்.

    முதல்அடி

    முதல்அடி

    இப்போது வடசென்னை வேட்பாளராக அறிமுகமாகி இருப்பதால் இவருக்கு வெகுஜன மக்களிடம் மவுசு கூடி வருகிறது. "2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடலோரங்களை முறைப்படுத்துதல் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே என்னுடைய முதல் கோரிக்கையாக இருக்கும்" என்கிறார் மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கும் காளியம்மாள்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+