"பவர் பிளே".. நடுக்கடலில் "மெகா" வானிலை மாற்றம்.. தமிழகத்தில் நாளையிலிருந்து புது ஆட்டம்.. வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் நாளையில் இருந்து கனமழை மீண்டும் தீவிரம் அடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த வாரம் இலங்கை வடக்கு பகுதிக்கு அருகே கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்பட்டது.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக்கு இலங்கை நோக்கி நகர நகர தென் மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது.
கடந்த 4 நாட்களாக தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது.

நாளை
இந்த நிலையில்தான் இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு இலங்கைக்கு அருகே கடல் பகுதியில் உருவாக உள்ளது. இலங்கை நிலப்பரப்பை நோக்கி நகர நகர சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும். முன்னர் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த மாற்றம் இரண்டும் சேர்ந்துதான் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

வானிலை
இதனால் சென்னையில் மீண்டும் மழை நாளையில் இருந்து தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த வாரம் பெய்தது போலவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை விடாமல் பெய்யும். அதன்பின் 2-3 நாட்களில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். அதன்பின் தமிழ்நாட்டில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

தாழ்வு பகுதி
இந்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும். இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசாக மழை பெய்யும். நாளையில் இருந்து மழை தீவிரம் அடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் பக்கம் வெளியிட்டுள்ள கணிப்பில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று ஆங்காங்கே மழை பெய்யும்,

இன்று மழை
முக்கியமாக இன்று மலையோர பகுதிகளில் மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை முழு "பவர் பிளே" நிலைக்கு செல்லும் முன் இந்த காலத்தில் லேசான மழை பெய்யும் துன்று சென்னை ரெயின்ஸ் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நாளை இரண்டு நாட்கள்
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் மழை தீவிரம் அடையும். அதற்கு அடுத்த நாட்களில் இருந்து தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் கனமழை அடுத்த இரண்டு நாட்களில் பெய்யும். நாளையில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications