சிலிண்டரில் தீ வைத்து தற்கொலை முயற்சி செய்த தாய்.. இரு குழந்தைகள் பலி
சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் படுக்கை அறையில் சிலிண்டருக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹன்சூர் (40). சென்னை மணலியில் உள்ள சின்னசேக்காடு பகுதியில் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்.

புதுவண்ணாரப்பேட்டை உள்ள தனியார் குடியிருப்பில் மனைவி ரிம்ஜிம் (28) மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.. இன்று வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் இருந்த சிலிண்டரை எடுத்து வந்து படுக்கை அறையில் தீ வைத்து விட்டு ரிம்ஜிம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், எதிர்பாராதவிதமாக தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பரவியது. இதனால் அவர்களது 4 வயது குழந்தை மற்றும் 8 மாத குழந்தையும் தீ விபத்தில் சிக்கினர். பக்கத்துக்கு வீட்டில் இருந்தவர்கள் தீ விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4 வயது குழந்தையும், 8 மாத குழந்தையும், உயிரிழந்த நிலையில் ரிம்ஜஇம்(28) மட்டும் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications