சென்னையில் பட்டினிச் சாவு! 3 நாளாக உணவின்றி தவித்த வடமாநில இளைஞர் பலி! மயங்கி கிடந்த 4 பேர் மீட்பு
சென்னை: சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர் 3 நாட்களாக தவித்து வந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் பட்டினி கிடந்த மேலும் 4 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மித்னாபூர், மங்குருல் ஆகிய பகுதிகளை சேர்ந்த சமர்கான் உள்பட 5 தொழிலாளர்கள் கடந்த 13 ஆம் தேதி சென்னைக்கு வந்தனர். இவர்கள் வேலை தேடி வந்ததாக தெரிகிறது.

இவர்கள் தங்குவதற்கு இடம் ஏதும் இல்லாததால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே தங்கிவிட்டனர். அங்கு நடைமேடையில் 5 பேர் மயங்கிய நிலையில் கிடந்தனர். இது குறித்து பொதுமக்கள் அங்குள்ள போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வந்து பார்த்த போது சமர்கான் என்ற 35 வயது இளைஞர் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிய நிலையில் மீதமிருந்த 4 பேரையும் மீட்டு எதிரே உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது உணவின்றி தவித்ததால் நடந்த நிகழ்வு என்பதால் பட்டினிச் சாவு என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications