Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கள் சாலையில் இதெல்லாம்.. கனவுதான்! ஃபார்முலா 4 சூப்பர்.. வடஇந்தியாவில் ஹிட் அடித்த சென்னை ரேஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 ரேஸ் வடஇந்தியாவில் பெரிய அளவில் ஹிட் அடித்து உள்ளது. வடஇந்தியர்கள் இடையே இந்த ஃபார்முலா 4 ரேஸ் மிகப்பெரிய அளவில் விவாதங்களை, பாராட்டுகளை பெற்று வருகிறது.

நேற்று ஃபார்முலா 4 ரேஸை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையில் கண்டுகளித்தனர். முக்கியமாக சனிக்கிழமை மாலை என்பதால் குடும்பங்கள் பலர் டிக்கெட் எடுத்து வந்திருந்தனர். மாலை நேரங்களில் மெரினா, பெசன்ட் நகர் செல்லும் மக்கள், அதை தவிர்த்துவிட்டு இங்கே அதிக அளவில் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து வந்திருந்தனர்.

formula 4 race udhayanidhi stalin

நேற்று முக்கியமாக இந்த நிகழ்வில் குழந்தைகள் பலர் பெற்றோர்களோடு வந்து கண்டுகளித்தனர். ஏ.. அங்க பாருடா.. சர்ர்ன்னு போகுது என்றெல்லாம் குஷியாக பேசியபடி ரேஸை கண்டுகளித்தனர். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், உலகமே வியக்கிற வகையில் #Formula4Chennai Racing on the Street Circuit போட்டி தீவுத்திடலில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியை, நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு நடமாடும் நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ள 100 மாணவ - மாணவியர் நேரில் காண ஏற்பாடு செய்திருந்தோம்.

புது வரலாறு படைக்கும் வகையில் நடைபெறும் இந்த ஃபார்முலா 4 போட்டியை கண்டு ரசித்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்தும், அன்பும், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போஸ்ட் செய்துள்ளார்.

வடஇந்தியாவில் ஹிட்: வடஇந்தியாவில் இந்த நிகழ்வு பெரிய ஹிட் அடித்துள்ளது. வடமாநிலங்களில் சாதாரண வாகனங்கள் செல்லவே சாலை சரியில்லை.. ஆனால தமிழ்நாட்டில் ஸ்ட்ரீட் ரெஸ் எல்லாம் வைக்கிறாங்க பாருங்க என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டி போஸ்டுகளை செய்து வருகின்றனர்

வடஇந்தியர்கள் பலர் இதை பாராட்டி போஸ்ட் செய்து வருகின்றனர். இதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம் என்று நெட்டிசன்கள் பலர் போஸ்ட் செய்துள்ளனர். தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது.. இதனால் முதலீடுகள் வரும் என்று போஸ்ட் செய்துள்ளனர். இன்னும் பலர்.. தமிழ்நாட்டில் நடப்பது போல பெங்களூர் போன்ற இடங்களில் செய்ய முடியாது. அதெல்லாம் கடைசி வரை கனவாகவே இருக்கும் என்று நெட்டிசன்கள் பலர் தமிழ்நாட்டை பாராட்டி வருகின்றனர்.

formula 4 race udhayanidhi stalin

சென்னை ரேஸ்: சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என தீவுத்திடலை சுற்றிலும் 3.8 கிமீ நீளமுள்ள சர்க்யூட்டில் இந்த கார் ரேஸ் நடக்கிறது. இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன.

formula 4 race udhayanidhi stalin

FIA சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கார் ரேஸ் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் நேற்று நிலவியது. கடைசி 6 மணி வரை ரேஸ் நடப்பதில் சிக்கல் இருந்தது.. 6 மணிக்கு கூட சில போட்டியாளர்கள் அறைக்கு திரும்பும் நிலை இருந்தது. கடைசி நேரத்தில் FIA அனுமதி கிடைத்து ஃபார்முலா 4 ரேஸ் தாமதமாக தொடங்கியது. முக்கியமாக போட்டிக்கு முன்பாக கூட.. மீண்டும் ஒருமுறை, போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் - பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands, அமைச்சர்கள் - நீதியரசர்கள் - அதிகாரிகளுக்கான Galleries, Race Drivers' Stand - Garage போன்ற வசதிகள், மருத்துவமனையில் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை சோதனை செய்து.. அப்படி பிரச்சனை இல்லை என்று உறுதி செய்யப்பட்டு அதன்பின்பே போட்டி தொடங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+