வடகிழக்கு பருவமழை ஆட்டம் ஆரம்பம்.. 21 மாவட்டங்கள்.. அதிரடியை கிளப்பிய குடிநீர் வாரிய ஆய்வு.. நிம்மதி
சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், முக்கிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரிய ஆய்வுகள் சொல்வது என்ன?
வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பரவலாக மழை பெய்யும். இதனை நம்பி விவசாயிகள் காய்கறி மற்றும் பயிர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
பருவமழை: ஆனால், இந்த முறை சரியான நேரத்தில் பருவமழை பெய்யவில்லை... இதனால் பயிர் சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது.. அதற்கேற்றவாறு, அணைகளும் எதுவும் நிரம்பாமலேயே இருந்தன.. எனவே, வட கிழக்கு பருவமழையை மட்டுமே விவசாயிகள் நம்பி உள்ளதால் பெருத்த கவலையில் இருந்தனர்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை ஆரம்பமாகி உள்ளது. ஆனால், இந்த வருடம் பருவ மழை, இயல்பை விட 15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது
திறந்தவெளி கிணறுகள்: மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மய்யம் சார்பில், நிலத்தடி நீர்மட்டம் குறித்த, மாதாந்திர ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள், 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளதாம்.
விழுப்புரம்: அதிகபட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2.44 மீட்டர், விழுப்புரத்தில் 1.35 மீட்டர், திருவண்ணாமலையில் 1.81 மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறுகிறார்கள்.
இதில், சென்னையைப் பொறுத்தவரை, ஆலந்தூரில் உள்ள புதுத்தெருவில் 0.97 மீட்டர், வேளச்சேரி - ராஜலட்சுமி நகரில் 0.5 மீட்டர், மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் 0.7 மீட்டர், பள்ளிக்கரணையில் உள்ள ஐஐடி காலணியில் 0.4 மீட்டர் அளவுக்கு தரையிலிருந்து நிலத்தடி நீர் மட்டம் உள்ளதாக, குடிநீர் வாரிய ஆய்வு தரவுகள் கூறுகின்றன.
இனியும் பருவமழை நீடிக்கும் நிலையில், தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications