சென்னை மக்களே! இன்று கனமழை கொட்டும்.. இந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராதீர்- நார்வே
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்றும் எந்தெந்த நேரங்களில் கனமழை பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சிறிது நாட்கள் மழை பெய்தது. இதையடுத்து மழை இல்லாமல் இருந்தது. எனினும் அவ்வப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக புதன்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை
இதில் அதிகபட்சமாக தாம்பரத்தில் மழை பெய்தது. முடிச்சூர், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது.

கனமழை
இதனால் நவம்பர் 30, டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

கனமழைக்கு வாய்ப்பு
இன்று சில மணிநேரங்களில் சென்னையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நார்வே வானிலை மையம் கூறுகையில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.

மீண்டும் வெளுக்கும்
அதன் பிறகு மழையின் அளவு குறைந்து காணப்படும். பின்னர் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மழை வெளுக்கும். இதைத் தொடர்ந்து மழையின் அளவு குறையும். ஆக இன்று நாள் முழுவதும் சென்னையில் மழை என நார்வே வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications