30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Chennai Rain: 30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை..நார்வே வானிலை மையம்

    சென்னை: சென்னையில் வரும் 30-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்காமல் கேட்பது போல் பொத்துக்கிட்டு ஊற்றியது வானம். இதனால் நீர் நிலைகள் நிரம்பி சென்னையே வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    இதோடு அவ்வளவுதான். அதன் பின்னர் 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் மழை பொய்த்து போனது. வடகிழக்கு பருவமழையே காலை வாரிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கமும் , தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிட்டது.

     வெள்ளக்காடு

    வெள்ளக்காடு

    வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து பார்க்கவே வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

     வானிலை மையம்

    வானிலை மையம்

    ஆனால் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் பிசுபிசுவென தூரல் போட்டுவிட்டது. மற்ற இடங்களில் வெறும் காத்துதான் வந்தது. இந்த நிலையில் வரும் 25-ஆம் தேதி தென் மேற்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

     மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    அந்த புயல் 29-ஆம் தேதி தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பிருப்பதாகவும் அப்போது கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளதால் சென்னைவாசிகள் இப்போதே மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கிவிட்டன.

    மாணவர்கள்

    மாணவர்கள்

    இந்த நிலையில் நார்வே வானிலை மையமும் ஒரு நற்செய்தியை கூறியுள்ளது. அதாவது வரும் 30-ஆம் தேதி முதல் மே 1,2, 3 ஆகிய 4 நாட்களுக்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளது. இதனால் மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்கூல் லீவு விட்ட பிறகு மழை பெய்தா என்ன பெய்யாட்டி என்ன என மாணவர்கள் இப்போதே புலம்பத் தொடங்கிவிட்டது நம் காதுகளில் விழாமல் இல்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+