கலைஞர் மகளிர் உரிமை தொகையை விடுங்க.. அரசு ஊழியர்கள் கணக்கிற்கு போன பணமழை.. ஆடிப்போன மக்கள்!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகையில் கூடுதலாக சேர்க்கப்பட்ட நபர்களுக்கு இன்று முதல் பணம் வரவு வைக்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வேறு சிலருக்கும் இன்று பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது தற்போது உள்ள பயனாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்களின் பண வசதி உயர்ந்து இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும். அதேபோல் அவர்களின் வருமானம் கூடி இருக்கிறதா.. என்றும் சோதனை செய்யப்படும். அவர்கள் உயிரோடு உள்ளனரா என்பதும் மாதம் மாதம் சோதனை செய்யப்படும் . அவர்கள் புதிதாக வாகனம் வாங்கி உள்ளனரா என்பதும் சோதிக்கப்படும்.
இது எல்லாம் சோதிக்கப்பட்டு அதன்பின்பே மாதம் மாதம் பணம் போடப்படும். தேவையின்றி பண வசதி படைத்தவர்களுக்கு பணம் போடுவதை தடுப்பதற்காக இந்த சோதனை முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
பயனாளிகள் மேல்முறையீடு: அதோடு பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது இதுவரை பணம் கிடைக்காமல் விடுபட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய முடியும். அவர்களுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது மேல்முறையீடு செய்ய மேலும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது இந்த திட்டத்தில் மேலும் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர். நாளை இந்த திட்டத்தின் இரண்டாம் பாதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு இன்றே கலைஞர் மகளிர் உரிமை தொகையில் கூடுதலாக சேர்க்கப்பட்ட நபர்களுக்கு இன்று முதல் பணம் வரவு வைக்கப்படுகிறது.
இதற்கான மெசேஜ் பலருக்கும் சென்று உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வேறு சிலருக்கும் இன்று பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த அகவிலைப்படி உயர்வு இன்று முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது..
அகவிலைப்படி உயர்வு: கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2546.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 42% அகவிலைப்படி 01.07.2023 முதல் 46%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு தொகை இந்த வாரமே வரவு வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் கொஞ்சம் தாமதமாக கூட பொதுவாக பணம் வரவு வைக்கப்படும். ஆனால் இது தீபாவளி வாரம். அதனால் பலருக்கும் பணத்தேவை இருக்கும். இதன் காரணமாக இன்றே பலருக்கும் பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications