Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லுலு மாலை விடுங்க.. அசோக் நகரில் வரும் பிரம்மாண்ட மால்! கட்ட போறது யாருன்னு தெரிஞ்சா.. அசந்துடுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியில் மிகப்பெரிய 22 அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது . இடையில் நிறுத்தப்பட்டு இருந்த கட்டுமானம் மீண்டும் தொடங்க உள்ளது.

சென்னையின் இந்த பகுதியில் பிரம்மாண்ட மால் வர உள்ளது. இதை யார் காட்டுகிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகிடுவீர்கள். தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இந்த குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒயின் கிளாஸ் வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.

Not just Lulu mall Chennai to get another big mall in the Ashok Nagar area by TNHB

கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி இடத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மாலுக்கு ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுமானத்தில் தற்போது 10 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. ட்வின் டவர் என்பதால் இன்னொரு டவரும் உடன் கட்டப்பட உள்ளது. மீதம் உள்ள மாடிகளின் கட்டுமானம் தற்போது நடந்து வருகிறது. இங்கே மால் வருவதால் இனி உதயம் தியேட்டர் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது. இந்த நிலையில்தான் சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கே வரப்போகும் புதிய மிகப்பெரிய திட்டம் பற்றிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

Not just Lulu mall Chennai to get another big mall in the Ashok Nagar area by TNHB

உதயம் தியேட்டர்: பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.

இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னையில் பல முக்கிய பழைய ஹோட்டல்கள், இடங்கள் வாங்கப்பட்டு உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

Not just Lulu mall Chennai to get another big mall in the Ashok Nagar area by TNHB

அப்படித்தான் தற்போது உதயம் தியேட்டரும் வாங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் தற்போது அங்கே ஓடும் கர்ணன் உள்ளிட்ட பழைய படங்கள் விரைவில் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

உதயம் தியேட்டர் பின்னணி: உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைச்சேன்.. என்று பாடல் தொடங்கி சென்னையின் லேண்ட்மார்க் பகுதிகளில் ஒன்றாக இந்த தியேட்டர் இருந்தது. இந்த நிலையில்தான் அந்த தியேட்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Not just Lulu mall Chennai to get another big mall in the Ashok Nagar area by TNHB

கடந்த 2009ல்தான் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை மீண்டும் வாங்கினார். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.80 கோடிக்கு வாங்கினார். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.

இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் ஏற்கனவே லுலு மால் பிரார்த்தனா தியேட்டர் உள்ள பகுதியில் வரும் நிலையில்தான் அசோக் நகரில் அடுத்த மால் அமைய உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+