செங்கோட்டையனுக்கு இணையான பவர் கொண்டவர்.. மிக பெரிய மீனை.. தூண்டில் போட்டு தூக்கிய தவெக விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில் விரைவில் இன்னும் மிகப்பெரிய தலைவர் ஒருவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

அதிமுக தரப்பில் விசாரித்ததில் செங்கோட்டையன் தவெக போனது வெறும் டீசர்தான் என்கிறார்கள். மெயின் பிக்சர் இனிதான் என்கிறார்கள். அதிமுகவில் உள்ள 10 முக்கியமான தலைகளிடம் செங்கோட்டையன் பேசி வருகிறாராம். அதில் டாப் தலைவர் ஒருவர் விரைவில் தவெக செல்லலாம் என்று கூறப்படுகிறது. மாஜி அமைச்சர்கள், சில மூத்த எம்எல்ஏக்கள், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தலைகள் பலரிடமும் செங்கோட்டையன் தீவிரமாக பேசி வருகிறாராம்.

Tamilaga Vetri Kazhagam vijay

செங்கோட்டையன் இணையான பவர் கொண்டவர்

அதாவது கொங்கு மண்டலத்தில் இருந்து இன்னொரு தலைவர், சென்னையில் இருந்து ஒருவர், டெல்டாவில் இருந்து இருவர் என்று இன்னும் 10 தலைகள் விரைவில் தவெகவிற்கு தாவ போகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வைத்திலிங்கம், மாபா பாண்டியராஜன் தவெகவில் இணையலாம் என்று செய்திகள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கோட்டையன் 10 பேரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக செங்கோட்டையன் இணையான பவர் கொண்ட ஒருவர் தவெகவிற்கு வருவார் என்று கூறப்படுகிறது.

சிட்டி டிஸ்மாண்டில் என்று ரஜினி சொன்னதும் ரோபோ சிட்டி உடல் பாகங்களை அகற்றுவது போல.. அதிமுகவின் பாகங்களை செங்கோட்டையன் ஒவ்வொன்றாக அகற்றி தவெகவிற்கு கொண்டு வரப்போகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அடுத்த சில நாட்களில் இதனால் சுடசுட.. பல அரசியல் திருப்பங்கள் நடக்கலாம் எனப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது நடப்பதோ மழைக்காலம்.. ஆனால் அதிமுகவிற்கு மட்டும் அது இலையுதிர் காலம். அதாவது இரட்டை இலையில் இருந்து பல இலைகள் உதிர்ந்து விழுந்து வேறு கட்சிக்கு பறந்து செல்லும்.. இலையுதிர் காலம் இது என்கிறார்கள் ரத்தம் கொதிக்க நிற்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

அதிமுக கூடாரம் காலி

அதிமுகவில் இருந்து கடந்த சில நாட்களாகவே பலர் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவின் முடிவு பல விவாதங்களை எழுப்பியது. அதிமுகவின் முக்கியமான இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா, திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர் அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தார்.

அதேபோல் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார்.

லிஸ்ட் கூடிக்கொண்டே போகிறது

இப்படி வரிசையாக அதிமுகவில் இருந்து வெளியேறும் தலைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. எங்கடா இங்க இருந்த என் டீமை காணோம் என்று ரியாஸ் கானிடம் மாட்டிக்கொண்ட வடிவேல் தனது அடியாட்களை தேடுவது போல எடப்பாடி பழனிசாமி திரும்பி பார்க்கும் முன் கட்சியில் இருந்து கொத்து கொத்தாக ஆட்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில்தான் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தவெகவில் இணைந்துள்ளார். அவர்தான் அந்த டாப் தலையை அதிமுகவில் இருந்து தவெகவிற்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+