கதவை திறந்த விஜய்.. இத்தனை நாட்கள் பிற கட்சியினரை அனுமதிக்காமல்.. இப்போது அனுமதிப்பது ஏன்? காரணம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் உள்ளே இன்னும் பல மாற்று கட்சி நிர்வாகிகளை கொண்டு வர விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறாராம் விஜய்.
மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமன்றி பல முக்கிய தலைவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இதற்காக விஜயுடன் அவர்கள் தீவிரமாக பேசி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை இந்த இணைப்பு நிகழ்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் அதிமுக பேச்சு
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், வேகமாக வளர்ந்து வரும் புதிய கட்சியில் இணைவது தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால்.. செங்கோட்டையன் மட்டுமன்றி பல முக்கிய தலைவர்கள் விஜயின் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
செங்கோட்டையன் பல பத்தாண்டுகளாக தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளார். அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, அவரது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கேள்விகளை எழுப்பியது. தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணையும் முடிவு, தற்போதுள்ள கட்சிகளில் அதிருப்தியில் உள்ள மற்ற மூத்த தலைவர்களையும் பாதிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய செங்கோட்டையன் மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் பின்னணி கொண்ட தலைவர்களும் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய் மக்கள் மத்தியில் வலுவான பிணைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.
கதவை திறந்த விஜய்
1. இதில் இத்தனை காலம் மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் கதவை திறக்காமல் இருந்தார். தற்போது மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அனுமதி அளிக்க உள்ளாராம்.
2. தமிழக வெற்றிக் கழகம் உள்ளே இருந்த நிர்வாகி ஒருவர்.. மாற்று கட்சி நிர்வாகிகளை அனுமதிக்காமல் மறைமுகமாக தடுத்து வந்தார். அந்த பவர் புல் நபரின் வலிமை தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. அவருக்கான பவர் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
3. அவர்தான் இத்தனை காலம்.. மாற்று கட்சியினர் வேண்டாம் என்று விஜயை கட்டுப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அவருக்கான பலம் இப்போது குறைந்துவிட்டது.
4. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் உள்ளே இன்னும் பல மாற்று கட்சி நிர்வாகிகளை கொண்டு வர விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறாராம் விஜய்.
5. மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் கதவை திறக்க முடிவு செய்துள்ளாராம். செங்கோட்டையன் என்பது தொடக்க புள்ளிதான். மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமன்றி பல முக்கிய தலைவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இதற்காக விஜயுடன் அவர்கள் தீவிரமாக பேசி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications