விஜயதாரணி வெறும் டீசர்தான்.. அதிமுகவின் "கெளுத்தி" மீன்களையும்.. தூக்க போகுது பாஜக.. அரசியலே மாறுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி. ஆனால் இவர் மட்டுமின்றி இன்னும் சிலர் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விஜயதாரணி முயன்று உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Not just Vijayadharani, More leaders from other parties may join BJP ahead of Lok Sabha elections

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்எல்ஏ விஜய் வசந்த் தொகுதியில் போட்டியிட்டு தேசிய அரசியலுக்கு செல்ல இவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அவர் பாஜகவில் இணைந்துவிட்டார் என்கிறார்கள். இதனால் பாஜகவில் இவருக்கு தென் மண்டலத்தில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்கிறார்கள்.

மேலும் சிலர்: ஆனால் இவர் மட்டுமின்றி இன்னும் சிலர் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாடு பாஜகவில் கடந்த 10 ஆண்டுகளாக முக்கிய தலைவர்களாக இருந்த பலரும் தற்போது ஆக்டிவ் அரசியலில் இருந்து மாற்றப்பட்டு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு பாஜகவிலும் இளம் தலைவர்களுக்கு தற்போது முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.அண்ணாமலையின் நியமனத்திற்கு பின் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. பல இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள், பல்வேறு அணி தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. பாஜகவின் பிரபலமான சீனியர்கள் யாரும் தற்போது கட்சியில் ஆக்டிவாக இல்லை.

ஒதுக்கப்பட்ட சீனியர்கள்: இன்னொரு பக்கம் பாஜகவில் சீனியர்களாக இருந்த பல்வேறு தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக எல் . முருகனுக்கு முன்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை தூத்துக்குடியில் தோல்வி அடைந்த பின் 2019ல் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவராக வலம் வந்த முன்னாள் தலைவர் இல கணேசன் 22ம் தேதி ஆகஸ்ட், 2021 அன்று மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.அதன்பின் மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவராக முன்பு இருந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரும் ஆளுநர் ஆகிவிட்டார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூக்க முடிவு: ஆளுநர் பதவி என்பது அரசியலில் இருந்து வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் போன்றது ஆகும். ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுக்கி தள்ளாமல் அவர்களுக்கு மரியாதையாக வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் ஆகும். பாஜகவில் தற்போது பெரிய முகமாக, கட்சியின் சீனியர் தலை என்று மக்களிடம் பிரபலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை.

இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ஒரு சில அதிமுக தலைகள் பாஜக பக்கம் செல்ல திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. கட்சிக்கு முகமாக இருக்கும் விதமாக ஒரு சிலரை தூக்க அக்கட்சி திட்டமிட்டு வருகிறதாம்.

அதிமுக பாஜக இடையே தமிழ்நாட்டில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் இந்த திட்டத்தில் இறங்கி உள்ளார்களாம். எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கட்சியின் 2-3 டாப் லீடர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்கும் என்கிறார்கள்.

ஓபிஎஸ் மூலமாக எடப்பாடிக்கு எதிராக இருக்கும் கொங்கு மண்டல தலைவர்களை பாஜக பக்கம் கொண்டு செல்ல முயற்சிகள் நடந்து வருகிறதாம். முக்கியமாக லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு முகமாகும் விதமாக கொங்கு மண்டலத்தில் இருந்து அதிமுகவின் "கெளுத்தி" மீன்களை அள்ளிப்போடும் திட்டத்தில் தமிழ்நாடு பாஜக இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயதாரணி வெறும் டீசர்தான். லோக்சபா தேர்தலுக்கு முன் இன்னும் முக்கியமான சிலர் பாஜக பக்கம் தாவ போவதாகவே செய்திகள் வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+