Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 மட்டுமல்ல.. நாடும் நமதே.. திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரித்த கனிமொழி எம்.பி நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் அறிக்கை மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என்று எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் முதல்வர் கொண்டு போவதற்கு வரவிருக்கும் தேர்தல் மிக முக்கியம். வரவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 40 மட்டுமில்லை; நாடும் நமதே என்றும் கனிமொழி எம்.பி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எடுத்துரைத்தார். பின்னர் அவர் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் கைகளில் கொடுத்தார்.

Not only 40 The country is ours says Kanimozhi MP who prepared DMK s election manifesto

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்கு முன் பேசிய கனிமொழி எம்.பி, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தில் தேர்தல் அறிக்கை என்பது தேர்தலின் மிக முக்கிய அங்கமாக எப்போதும் இருந்துள்ளது.

தலைவர் கலைஞர் தொட்டு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்தித்து, தேர்தல் அறிக்கை என்பது மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்று அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இன்று அண்ணன் தளபதி நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரம்பரியம் இருக்க கூடிய தேர்தல் அறிக்கையை உருவாக்க கூடிய பொறுப்பை, அந்த குழுவின் தலைமையை என்னிடம் ஒப்படைத்ததற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம். தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே திமுகவின் குறிக்கோள். தி.மு.க. செய்த சாதனைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது பட்டியலிட்டோம், அது பிரமிப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

நாம் தொடர்ந்து பெறுமையாக சொல்லக்கூடிய திராவிட மாடல் ஆட்சி. அந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகனாக இருக்க கூடிய நம்முடைய முதலமைச்சர், நம்முடைய பெரியவர்கள் பெரிய பெரிய விசியங்களை, செயற்கரிய செயல்களை செய்வார்கள் என்று நாம் எப்போதும் செல்லுவோம்.

இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் போது தான் நம்முடைய முதலமைச்சரின் ஆட்சி, இந்த குறுகிய காலத்திற்குள் எத்தனை சாதனைகளை செய்துள்ளது என்பதை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. தேர்தல் அறிக்கையில் நம்முடைய சாதனைகளை போட்டால் அதற்கே சரியாகிவிடும் என்பதால் பல சாதனைகளை குறைக்க வேண்டியிருந்த அவசியத்தையும் நாங்கள் பார்த்தோம்.

ஒவ்வொருவரையும் தொடக்கூடிய ஆட்சியாக, தமிழ்நாட்டில் இருக்ககூடிய அத்தனை பேரின் வாழ்க்கையையும் மாற்றக்கூடிய ஆட்சியாக நம்முடைய முதலமைச்சரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியில் இந்த தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு, அடுத்து இந்த திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் நம்முடைய முதலமைச்சர் கொண்டு செல்வதற்கு வரக்கூடிய தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நாட்டில் உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த நாடு காத்திருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் முதல்வர் கொண்டு போவதற்கு வரவிருக்கும் தேர்தல் மிக முக்கியம். நிச்சயமாக வரவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 40 மட்டுமில்லை; நாடும் நமதே!. என்று நம்பிக்கையுடன் கூறினார் கனிமொழி.

Not only 40 The country is ours says Kanimozhi MP who prepared DMK s election manifesto

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 64 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். தங்கை கனிமொழி தலைமையிலான குழு மிகச் சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழிக்கும், குழுவினருக்கு தலைமைக் கழகம் சார்பில் நன்றி. என்று கூறி வாசித்தார் முதல்வர் ஸ்டாலின். மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறுகின்ற வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அந்தப் பதவி இருக்கும் வரைக்கும் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனையைப் பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை இரத்து செய்யப்படும். நாடாளுமன்ற - சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்ச ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும். வேளாண் விளைப் பொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு + 50 விழுக்காடு என்பதை வலியுறுத்தி உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்.பி.ஜி. சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயாகக் குறைக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும். ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும். மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செயல்படுத்தி அதை முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கைகளில் ஒப்படைத்து விட்டார். கடந்த லோக்சபா தேர்தலைப் போல இந்த லோக்சபா தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார் கனிமொழி. மக்கள் ஆதரவுடன் வெற்றிவாகை சூடுவேன் என்று கூறியுள்ளார் கனிமொழி எம்.பி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+