அந்த நாளே வந்துடுச்சு.. இன்னைக்கும் முடியலைன்னா அவ்ளோதான்.. ஸ்டாலினுக்கு என்னாச்சு?.. எகிறிய டென்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும், நாளை வெளியாகும் என்று நாளுக்கு நாள் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.. தேர்தல் களத்தில் திமுக இதனால் கொஞ்சம் பின்னடைவை சந்தித்து உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் தற்போது அதிமுக ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.. தேதிமுக கூட்டணியை விட்டு விலகிய பின் வரிசையாக அதிமுக அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவிப்பது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது, சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது என்று அதிமுக அதிவேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிடுவது மட்டுமே தற்போது பாக்கி.. மற்றபடி அதிமுக எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில்தான் சென்று கொண்டு இருக்கிறது.

வேகம்

வேகம்

ஒரு பக்கம் அதிமுக இப்படி வேகம் காட்டினாலும் இன்னொரு பக்கம் திமுக திடீர் என்று சுணக்கம் அடைந்துள்ளது. திமுகவின் கணக்குப்படி நேற்று முதல்நாள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்க வேண்டும். நேற்று திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் இரண்டையும் திமுக இதுவரை செய்யவில்லை.

காரணம் என்ன

காரணம் என்ன

வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிடாமல் போனதற்கு கூட்டணி கட்சிகளின் நெருக்கடிதான் காரணம் என்கிறார்கள். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. காங்கிரசின் 25 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளையும் தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்தது.

இழுபறி

இழுபறி

காங்கிரஸ் கேட்ட இடங்களை கொடுப்பதில் திமுகவிற்கு விருப்பம் இல்லை. இன்னொரு பக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தாங்கள் கேட்ட 6 தொகுதிகளில் விடாபிடியாக இருந்தது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கேட்ட சில தொகுதிகளை திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரும் கேட்டு இருக்கிறார்கள். இதனால் அந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதில் இழுபறி நீடித்துள்ளது.

சமரசம்

சமரசம்

இதில் சமரசம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சி முன்வரவில்லை. தாங்கள் கேட்ட தொகுதிகளை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்துள்ளது. நேற்று மாலை வரை நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின்தான் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் கண்டனர். நேற்று மாலைதான் இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இதனால்தான் இன்று வரை திமுக தரப்பு தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. 173 தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த பட்டியலும் இன்னும் முழுமையாக தயார் செய்யப்படவில்லை. சில வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திமுகவிற்குள் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.

குழப்பம்

குழப்பம்

இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் பேசியதில்.. வேட்பாளர் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில இடங்களை உறுதி செய்ய வேண்டும். 2 நாள் லேட்டாகிவிட்டது. இதனால் எங்கள் தரப்பில் சில டென்ஷானாக இருக்கிறார்கள். தேர்தல் மிகவும் வேகமாக வந்துவிட்டது. கூட்டணி கட்சிகளும் நெருக்கடி கொடுத்துவிட்டது என்கிறார்கள்.

இன்று

இன்று

ஸ்டாலின் இப்போது கொஞ்சம் வேகம் குறைந்துவிட்டதாகவும் இன்னும் அதிரடியில் இறங்கவில்லை என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இன்று வேட்பாளர் வேட்பு மனு தாக்கலும் தொடங்குகிறது. இன்றும் வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப்போனால் அது திமுகவிற்கு பெரிய பின்னடைவாக அமையும். இன்று மாலைக்குள் எப்படியாவது வேட்பாளர் அறிவிப்பை வெளியிடும் முனைப்பில் திமுக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+