கருப்புக்கொடி காட்டி எதுவும் சாதித்துவிட முடியாது.. முதலில் ஆளுநரிடம் பேசுங்கள்.. அண்ணாமலை அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக கோவையில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் கருப்புக் கொடி காட்டி எதையும் சாதித்து விட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை சென்றார். கோவை வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கருப்புக்கொடி காட்டி எதுவும் சாதித்துவிட முடியாது என்றும் முதலில் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Nothing can be achieved by showing the black flag, first talk to the governor, Annamalai slams MK Stalin

தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தொடர்ந்து ஒவ்வொரு சமுதாயத்தை பற்றி பேசுவதையே திமுக தன் முதல் கடமையாக வைத்துக்கொண்டு பேசி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சைலேந்திர பாபு அவர்கள் தமிழ்நாட்டின் டிஜிபியாக வந்திருக்கிறார். திறமையால் வந்திருக்கிறார். எல்லோருக்கும் ஜாதி அடையாளம் கொடுத்தால் கடைசியில் அது எங்கே போய் நிற்கும்.

இஸ்ரோவின் மிசன் டைரக்டர் அவர்களுக்கு யாராவது ஜாதி அடையாளம் கொடுத்தால் அது எங்கே போய் முடியும். விழுப்புரத்தை சேர்ந்தவர் இந்த ஜாதி... இப்படி கூறினால்.. இது எங்கே போய் முடியப்போகுது.. திமுகவை பொறுத்தவரை இந்த ஜாதி விஷத்தை தூண்டி.. தூண்டி.. தூண்டி.. இதுபோன்ற விஷமத்தனமாக கருத்துகளை முன்வைத்துக்கொண்டெ இருக்கிறார்கள்.. இது கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி அறுவறுக்கத்தக்க ஒரு செயல்..

இந்த ஜாதிய வைத்து.. எல்லாத்தையும் ஜாதிக்குள்ள அடைக்குறது உண்மையாலையே கேட்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. எதற்காக கருப்புக்கொடி காட்டுகிறார்கள்.. ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டி என்ன நடக்கப்போகிறது.. காவல்துறைக்கு சிரமம்.. ஒரு 10 பேரை கைது செய்து வீட்டில் வைக்க வேண்டும்... ஏதாவது ஒன்று என்றாலும் காவல்துறை தான் பதில் சொல்ல வேண்டிருயிருக்கும்.. இப்படி காவல்துறைக்கு வேலை வைக்க வேண்டும் என்பதற்காக செய்கிறீர்கள் என்றால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துங்க..

கருப்புக்கொடி காட்டி எதுவும் சாதித்துவிட முடியாது.. பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். முதலில் ஆளுநரிடம் முதல்வர் பேச வேண்டும்.. ஜனநாயகமே பேச்சில் தான் இருக்கிறது. பேசி பேசி தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். சண்டை போட்டு எல்லாம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.. எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கலைஞர் கருணாநிதியை ஒரு விஷயத்தில் பாராட்டுவேன்.. ஏனென்றால் அவர் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பார்...

இதனால் தான் அவர்கள் மீது மதிப்பு மரியாதை இருந்தது. இன்று ஆளுநரிடம் பேசாமல் வம்பிழுத்து.. வம்பிழுத்து.. சூட்டை கிளப்பி.. இது எங்கே போய் முடிய போகிறது... எங்கேயும் போய் முடியப்போறதில்லை" இவ்வாறு அண்ணாமலை கூறினார். மேலும் அவர் கூறுகையில், ''காவல்துறையை பொறுத்தவரை, தமிழகத்துக்கு தேவை ஒரு காவல்துறை, ஒரு லீடர்சிப், ஒரு யூனிட்டியாக இருக்கக்கூடிய காவல்துறை, ஒரு டீம் தமிழ்நாடு.. இது தான் எங்களுக்கும் வேண்டும்.. உங்களுக்கும் வேண்டும்.. எல்லாருக்கும் வேண்டும்.. தயவு செய்து இதில் ஜாதியை கொண்டு வராதீர்கள்.. நார்த் இந்தியன்.. சவுத் இந்தியன் என கொண்டு வராதீர்கள்.. அதற்குள்ள ஆளும்கட்சி எதிர்க்கட்சியை கொண்டு வராதீர்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+