சென்னை கடற்கரை டூ தாம்பரம் வரை ரயில்கள் ரத்து! நோ டென்ஷன்.. சிறப்பு பேருந்துகளை அறிவித்தது எம்டிசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்படும் சிரமங்களை குறைக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர பேருந்து போக்குவரத்து கழகம்(MTC) அறிவித்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு புறநகர் ரயில்களுக்கும் பங்கு இருக்கிறது.

suburban trains chennai mtc

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 முனைகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் இன்ஜினியரிங் பணிகள் காரணமாக, நாளை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "தாம்பரம் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இந்த நேரத்தில் கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் அனைத்து மின்சார ரயில்களும் இருமாா்க்கத்திலும் ரத்து செய்யப்படும். அதேநேரம், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக கடற்கரையிலிருந்து காலை 8.35, 9.38,10.10,10.40,11.20, நண்பகல் 12, பிற்பகல் ,1.05,1.30, 2.30, 3.10, 3.45, மாலை 4.10, 4.30, 4.50, 5.10, 5.50 மணிக்கு பல்லாவரத்துக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக பல்லாவரத்திலிருந்து காலை 9.35, 10.35, 11.05,11.35, நண்பகல் 12.10, 12.55 பிற்பகல் 1.55, 2.25, 3.20, மாலை 4, 4.40, 5.05, 5.20, 5.40, 6.05, 6.40 மணிக்கு கடற்கரைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே புறநகர் ரயில் சேவை சில நேரங்களில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், பயணிகளின் சிரமத்தை குறைக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் தனது அறிக்கையில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (15.09.2024) காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது" என தெரிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+